ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்கன்னு கோலி சொல்லிட்டாரு.. அவரும் மனுஷன் தான்.. இதை செய்வாரு.. ஏபிடி ஆதரவு

AB De Villiers
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது. 2008 முதல் விளையாடி வரும் அந்த அணியால் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் நேற்று வந்த குஜராத் அணி கூட தங்களது முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இருப்பினும் பெங்களூரு அணி ரசிகர்களோ பல கோப்பைகளை வென்றது போல சென்னை மற்றும் மும்பை ரசிகர்களிடம் மோதுவது வழக்கமாகும். அதனாலேயே ஆர்சிபி மற்றும் அதன் ரசிகர்களை மற்ற அணி ரசிகர்கள் உச்சகட்டமாக கிண்டலடிப்பது வாடிக்கையாகும். குறிப்பாக ஈ சலா கப் நம்தே என்று ஆர்சிபி ரசிகர்கள் எதிரணிகளை ரசிகர்களை கலாய்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

- Advertisement -

ஈ சால் கம் நம்தே வேணாமே:

கடைசியில் தோல்வியை சந்திக்கும் போது எதிரணி ரசிகர்கள் அதே வாசகங்களை பயன்படுத்தி ஆர்சிபி ரசிகர்களுக்கு பதிலடி கொடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் ஈ சால் கம் நம்தே என்று எங்கேயும் சொல்லாதீர்கள் என விராட் கோலி தமக்கு மெசேஜ் செய்ததாக ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஏதோ ஒரு இடத்தில் ஒருமுறை ஈ சால் கம் நம்தே என்று நான் சொன்னேன். உடனடியாக அதை இனிமேலும் பயன்படுத்தாதீர்கள் என்று விராட் கோலியிடமிருந்து எனக்கு மெசேஜ் வந்தது. ஒருவேளை இந்த வருடம் ஆர்சிபி தங்களது முதல் கோப்பையை வென்றால் நானும் அந்தக் கொண்டாட்டத்தில் ஒருவராக பங்கேற்பேன்” எனக் கூறினார். மேலும் விராட் கோலியை தேவையின்றி அவ்வப்போது பலரும் விமர்சிப்பதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

கோலியும் மனுஷன் தாங்க:

ஆனால் அவரும் மனிதர் தான் என்பதுடன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை போல ஆர்சிபிக்கு விராட் கோலி கோப்பையை வென்றுக் கொடுப்பார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்ருமாறு. “கடந்த சில வருடங்களாக விராட் கோலி தேவையற்ற விமர்சனங்களை எடுத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். உண்மையில் விமர்சனங்கள் அவருக்கு இன்னும் சிறப்பாக பேட்டி செய்வதற்கான உந்துதலைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் டி20 அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் இதை செய்தே ஆகவேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“அனைத்தையும் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள். விராட் கோலி மிகச்சிறந்த அணி வீரர். அதையும் தாண்டி நல்ல மனிதர். தனது கேரியர் பற்றிய சந்தேகங்கள் அவரது தலையிலும் இருக்கும். ஆனால் தேவையான சூழ்நிலையில் அனைத்தையும் தடுத்து தன்னுடைய அணிக்காக அசத்தக்கூடிய திறன் விராட் கோலியிடம் இருக்கிறது. அதை சாம்பியன்ஸ் டிராபியில் அவரது கண்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்” எனக் கூறினார்.

Advertisement