டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்து கொண்டார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியதால் 27 கோடி என்கிற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி அவரை விலைக்கு வாங்கி அந்த அணியின் புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது.
ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க இதை செய்தே ஆகனும் – ஆகாஷ் சோப்ரா
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் ஒரு கேம் சேஞ்சர் என்பதனாலே இவருக்கு மிகப்பெரிய போட்டி இருந்தது. ஆனாலும் இந்திய டி20 அணியை பொறுத்தவரை அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருவது பெரிய ஏமாற்றம்தான். ஏனெனில் தற்போதைய டி20 இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் மற்றும் துவக்க வீரராக இடம் பிடித்துள்ளதால் ரிஷப் பண்டிற்கு இடம் கிடைக்காமல் போயுள்ளது.
இந்நிலையில் இந்திய டி20 அணியில் மீண்டும் ரிஷப் பண்ட் இடம் பிடிக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட்டிற்கு 2026 டி20 உலகக்கோப்பை வாய்ப்பு என்பது கடினம் தான்.
ஒருவேளை அந்த வாய்ப்பை அவர் மீண்டும் பிடிக்க வேண்டுமெனில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் அசத்த வேண்டும். ஏனென்றால் தற்போதைய டி20 இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஒருவேளை அவர் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டுமெனில் ஐபிஎல் தொடரில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும்.
ரிஷப் பண்ட் போன்ற ஒரு பெரிய வீரருக்கு டி20 அணியில் இடம் கிடைக்காதது உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஆனாலும் இந்திய அணியில் தற்போது போட்டி அதிகரித்துள்ளதால் அவர் மீண்டும் தனது திறனை நிரூபிக்க வேண்டும்.
இதையும் படிங்க : விராட் கோலி இதை மட்டும் செய்தால் போதும் ஆர்.பி.சி அணிக்கு தான் கப் – ஏ.பி.டி வில்லியர்ஸ் நம்பிக்கை
அந்த வகையில் தற்போது லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் அவர் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி டாப் ஆர்டரில் பேட்டிங் செய்தால் அவரால் நிறைய ரன்களை குவிக்க முடியும். அப்படி தொடர்ச்சியாக ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவரை அணியில் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி செய்தால் மட்டுமே அவரால் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுக்க முடியும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



