3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து பேசிய – கேப்டன் விராட் கோலி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைய இரண்டாவதாக நடைபெற்ற லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி கடைசி நாளில் இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ind

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அஸ்வின் நிச்சயம் மூன்றாவது போட்டியில் விளையாட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுவாக எழுந்துள்ளன.

- Advertisement -

அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் சொதப்பும் புஜாரா மற்றும் ரகானே ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்துக்களும் வலுவாக இருந்து வருகின்றன. இந்நிலையில் நாளைய மூன்றாம் போட்டியில் எந்தெந்த மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

IND 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : நாளைய மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்வதற்கான எந்தவித காரணமும் இல்லை. ஏனெனில் வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது அணியின் காம்பினேஷனில் மாற்றம் ஏற்பட்டாலோ அதனை நாம் செய்யலாம். ஆனால் தற்போது வரை இந்திய அணிக்கு அந்த அவசியம் ஏற்படவில்லை.

- Advertisement -

Bumrah

ஏற்கனவே இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் வின்னிங் காம்பினேஷனை ஏன் மாற்ற வேண்டும். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியும் பெற்றது. எனவே அணி காம்பினேஷனில் தேவை இல்லாமல் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என்று கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement