ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்களது முதல் கோப்பையை வெற்றி பெற்றிருந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வரும் பெங்களூரு அணி ஆண்டுதோறும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும் 18 ஆண்டுகளாக ஒரு கோப்பைக்காக காத்திருந்தனர்.
முதல் ஐ.பி.எல் கோப்பையை வென்றது குறித்து : விராட் கோலி நெகிழ்ச்சி
இறுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரை வென்று தங்களது முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தது. இந்த வெற்றி நீண்ட கால காத்திருப்பதற்குப் பிறகு கிடைத்ததால் ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அதோடு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.பி அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலிக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி இந்த ஒரு கோப்பைக்காகவே இத்தனை ஆண்டுகள் காத்திருந்தார். இப்படி 18 ஆண்டுகால காத்திருப்புக்கு பின்னர் கோப்பையை வென்றது குறித்து தற்போது விராட் கோலி சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
கடந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்ற போது என்னுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது என்பதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியாது. போட்டி முடிந்த அந்த நொடியில் என் கைகளை கூப்பி முழங்காலில் அமர்ந்து கண்ணீர் விட்டபடி கடவுளுக்கு நன்றி மட்டுமே சொன்னேன். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இப்படி ஒரு அற்புதமான தருணத்தை அனுபவித்து விட வேண்டும் என்று வேண்டினேன்.
இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹார்டிக் பாண்டியா வெளியேறுகிறாரா? – ஷர்துல் தாகூர் பதில்
அது கடந்த ஆண்டு ஒரு வழியாக நடந்தது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் வெல்வதற்கு முன்னால் கடைசி 4 பந்துகளில் நான் என்ன உணர்ந்தேன்? என்பதை மற்றவர்களுக்கு வார்த்தையால் விவரிக்க முடியாது. அது மிகவும் உணர்வுபூர்வமானது. ஒட்டுமொத்த ஆர்.சி.பி அணியின் ரசிகர்களும் இதற்காகவே காத்திருந்தனர் என்றும் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.



