மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹார்டிக் பாண்டியா வெளியேறுகிறாரா? – ஷர்துல் தாகூர் பதில்

Shardul Thakur
- Advertisement -

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹார்டிக் பாண்டியா தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறிய மும்பை அணி இந்த ஆண்டும் பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இதன் காரணமாக தற்போது எஞ்சியுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றியை நோக்கி சம்பிரதாய ஆட்டங்களாகவே விளையாடி வருகிறது.

மும்பை அணியிலிருந்து வெளியேறுகிறாரா பாண்டியா? : ஷர்துல் தாகூர் பதில்

மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் தோல்வியை சந்தித்ததால் அந்த அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா மீது பெரியளவில் விமர்சனங்கள் ஏற்பட்டது. அதே வேளையில் கடந்த சில போட்டிகளாகவே ஹார்டிக் பாண்டியா அணியில் இடம்பெறாமல் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தினர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு ஹார்திக் பாண்டியா ஏன் கடைசி சில போட்டிகளாக விளையாடவில்லை? என்ற கேள்வி அதிகளவில் எழுந்தது. அந்த கேள்விக்கு தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் சில விளக்கங்களை அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியா குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின்றன ஆனால் தற்போது அவர் காயமடைந்துள்ளார்.

அதன் காரணமாகவே அவரால் கடந்து சில போட்டிகளில் விளையாட முடியவில்லை. கடந்த மே 10-ஆம் தேதி ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதற்காக ராய்ப்பூர் வந்திருந்தார். ஆனால் முழு பிட்னஸ் இல்லாததால் அவர் அந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. தற்போது அவர் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எதிர்வரும் மே 20-ஆம் தேதி கே.கே.ஆர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று நம்புவதாக கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அடைந்த தோல்விக்கு காரணமே ருதுராஜ் கெய்க்வாட் செய்த இந்த தவறு தான் – பத்ரிநாத் பதிவு

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பாண்டியா வெளியேறப்போகிறாரா? என்பது குறித்த வதந்திக்கும் ஷர்துல் தாகூர் சில விளக்கங்களை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சமூக வலைதளத்தில் எப்போதும் ஏதாவது வதந்திகள் பரவிக்கொண்டே தான் இருக்கும். அதில் சில உண்மைகளாக இருக்கலாம், சில பொய்யாக இருக்கலாம் ஆனால் முடிவு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மட்டுமே எடுக்கும் என ஷர்துல் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement