சி.எஸ்.கே அடைந்த தோல்விக்கு காரணமே ருதுராஜ் கெய்க்வாட் செய்த இந்த தவறு தான் – பத்ரிநாத் பதிவு

Badrinath and Ruturaj
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக இந்த தொடரின் பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. ஆனால் அவர்கள் வெளியேறியது மட்டுமில்லாமல் கடைசி இரண்டு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தியும், லக்னோ அணி சென்னையை வீழ்த்தியும் இந்த இரண்டு அணிகளின் பிளே ஆப் வாய்ப்பை கடினம் ஆக்கியுள்ளனர்.

ருதுராஜ் செய்யும் தவறு தான் எல்லாத்துக்கும் காரணம் : பத்ரிநாத் பதிவு

ஏனெனில் மும்பை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் பெற்ற வெற்றி மற்ற அணியின் பிளே ஆப் வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற மிக முக்கியமான லீக் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 187 ரன்களை அடிக்க அதன் பின்னர் துரத்தி விளையாடிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு தற்போது மிக கடினமாக மாறியுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட பாதிக்கு பாதி இருந்த வேளையில் நேற்றைய தோல்விக்கு பிறகு சி.எஸ்.கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு மிகவும் அரிதாக மாறியுள்ளது.

இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, இந்த தொடரின் பெரும்பாலான ஆட்டங்களிலும் சரி சென்னை அணி தோல்வியை சந்திக்க ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான அணித்தேர்வு தான் காரணம் என சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது : அணித்தேர்வில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் செய்த தவறுகள் காரணமாகவே சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் கேள்விப்பட்ட வரை தோனி இந்த போட்டியில் நிச்சயம் விளையாடுவார் – அஷ்வின் ஓபன்டாக்

இந்த சீசனில் இது ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. நேற்றைய போட்டியில் அகீல் ஹுசைன் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் அவரை ஏன் தேர்வு செய்யவில்லை? என்று தெரியவில்லை. இதுபோன்ற நிறைய வாய்ப்புகளை அவர் தவற விட்டுள்ளார் என்று ருதுராஜ் கெய்க்வாட்டை விமர்சித்து பத்ரிநாத் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement