சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கணுக்கால் பகுதியில் காணமடைந்தார். இதன் காரணமாக இந்த ஐ.பி.எல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என சி.எஸ்.கே அணி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தோனி அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு : ரவிச்சந்திரன் அஷ்வின்
அந்த வகையில் ஆரம்பகட்ட போட்டிகளை தோனி தவறவிட்டாலும் இந்த தொடரின் பிற்பாதியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணி இதுவரை இந்த தொடரில் 12 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள வேளையில் இன்று வரை தோனி இந்த தொடரில் சி.எஸ்.கே அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்து வருகிறார்.
கடந்த சில போட்டிகளுக்கு முன்னதாகவே அவருக்கு காயம் குணமடைந்து முழு உடற்தகுதியை எட்டியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனாலும் அணியின் வெற்றி காம்பினேஷனை உடைக்க கூடாது என்பதற்காகவும் சரியான நேரம் வருவதற்காகவும் தோனி காத்திருப்பதாகவும் சில தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் பெரிய ரன் வித்யாசத்தில் சென்னை வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு கிடைக்கும் என்கிற இக்கட்டான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தோனி சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக மே 18-ஆம் தேதி நடைபெற இருக்கும் அடுத்த போட்டியில் நிச்சயம் களமிறங்க வாய்ப்புள்ளதாக முன்னாள் சி.எஸ்.கே வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்காக அன்ஷுல் காம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை – விவரம் இதோ
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் கேள்விப்பட்டவரை எம்.எஸ் தோனி மூன்று போட்டிகளுக்கு முன்னதாகவே விளையாட தயாராகி விட்டார். அதனால் நிச்சயம் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பினிஷர் குறையை போக்குவதற்காக அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் அஷ்வின் கூறியுள்ளார்.



