சி.எஸ்.கே அணிக்காக அன்ஷுல் காம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை – விவரம் இதோ

Anshul Kamboj
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 59-ஆவது போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரில் தங்களது ஆறாவது தோல்வியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அன்ஷுல் கம்போஜ் நிகழ்த்திய மோசமான சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குறித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை சார்பாக பந்துவீசிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ் 2.4 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 63 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணிக்காக இரண்டாவது பந்துவீச்சாளராக அவர் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் சி.எஸ்.கே அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான பந்துவீச்சாளராக கலீல் அகமது முதல் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது கலீல் அகமது 3 ஓவர்களில் 65 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாடுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – விராட் கோலி

இவ்வேளையில் அவருக்கு அடுத்து நேற்றைய போட்டியின் போது 2.4 ஓவர்கள் மட்டுமே வீசிய வேளையில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 63 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் சி.எஸ்.கே அணிக்காக ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement