2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாடுவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட – விராட் கோலி

Virat Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் தான் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் விளையாட விரும்புவதாக வெளிப்படையான தனது விருப்பத்தை அறிவித்திருந்தார்.

2027 ஒருநாள் உலககோப்பை தொடர் குறித்து பேசிய : விராட் கோலி

இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் அவரது வயது மற்றும் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கும் நிர்வாகம் இன்னும் விராட் கோலியின் இடம் குறித்து முக்கிய முடிவை எடுக்கவில்லை. ஆனாலும் தற்போது முழு உடற்தகுதியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி 2027 ஒரு நாள் உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் இதுவரை தான் விளையாடியுள்ள 12 ஆட்டங்களில் மூன்று அரைசதம் மற்றும் ஒரு சதம் என 484 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி 53 ரன்கள் சராசரியுடனும், 165 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் 2027 உலக கோப்பை தொடர் குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் :

கிரிக்கெட் விளையாட்டின் மீதான என்னுடைய காதல் இன்னமும் குறையாததால் மட்டுமே நான் விளையாட வருகிறேன். அணியில் என்னுடைய மதிப்பும், தகுதியையும் நிரூபிக்க வேண்டிய சூழல் வந்தால் அந்த இடம் எனக்கானது அல்ல. தற்போது வரை நான் மிகச் சிறப்பாகவே விளையாடி வருகிறேன். நான் எப்போது விளையாட வந்தாலும் முழு கவனத்தை விளையாட்டின் மீது மட்டுமே வைத்து உழைத்து வருகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : கிரிக்கெட் ஒரு வேடிக்கையான ஆட்டம்.. இப்படி நடப்பதெல்லாம் சகஜம் தான் – மிட்சல் மார்ஷ் பேட்டி

ஒருநாள் போட்டியில் 40 ஓவர்கள் முழுவதும் பவுண்டரிக்கு ஓடச் சொன்னால் கூட நான் அதை சிறிதும் புகார் இன்றி செய்வேன். ஏனென்றால் அந்த அளவிற்கு நான் தயாராகி வருகிறேன். நான் எதிர்வரும் 2027 உலகக்கோப்பை தொடரை நோக்கிய தற்போது கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகிறேன் என்றும் விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement