Virat Kohli : பயிற்சி போட்டியில் தோல்வி அடைந்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே – கோலி விளக்கம்

இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து

virat-kohli
- Advertisement -

இந்திய அணி நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது. அதுவும் குறிப்பாக துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

rohith

- Advertisement -

அதனைத் தொடர்ந்து வந்த கோலி 18 ரன்களும் ராகுல் 6 ரன்களும் தோனி 17 ரன்கள் எடுத்து ஏமாற்றினர். பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினர். பிறகு 37 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த பயிற்சி போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி பல தொடர்களாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி போட்டிக்கு பின் இந்திய அணியின் தோல்வி குறித்து கேப்டன் விராட் கோலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்த பயிற்சி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததில் ஒருவிதத்தில் எங்களது சோதனை வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த தோல்வி எங்களுக்கு மகிழ்ச்சியே ஏனெனில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை விரைவில் இருந்தது.

Kohli

இருந்த போதிலும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஆன ஜடேஜா பாண்டியா ஆகியோர் சிறப்பாக விளையாடினர். மேலும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. அதுமட்டுமின்றி பீல்டிங்கும் அருமையாக அமைந்தது. இதனால் தோல்வி குறித்து நம் மனதில் எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. தொடரின் வெற்றிக்காக இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த போட்டிகளில் வெற்றிபெற ஆயத்தமாக வேண்டும் என்று கூறினார்.

Advertisement