RCB vs KKR : நாங்களே எங்க வெற்றியை அவர்களுக்கு கிப்ட் பண்ணிட்டோம். தோல்விக்கு பிறகு – விராட் கோலி பேசியது என்ன?

Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், நித்திஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

RCB vs KKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக 21 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் :

RCB vs KKR

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியை நாங்களே அவர்களிடம் பறிகொடுத்து விட்டோம். இந்த தோல்வி எங்களுக்கு தேவையான ஒன்றுதான். கையில் இருந்த வெற்றியை நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த போட்டியை பொறுத்தவரை எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்த தவறிட்டோம்.

- Advertisement -

எளிதாக கைக்கு வந்த சில கேட்ச்களை தவறவிட்டதால் 25 முதல் 30 ரன்கள் வரை அவர்கள் அதிகமாக குவித்து விட்டனர். இருந்தாலும் சேசிங்கின் போது நாங்கள் மிகச் சிறப்பாகவே ஆரம்பித்தோம். ஆனால் நாங்கள் அடிக்கும் பந்துகள் எல்லாம் அவர்களின் பீல்டர்களை நோக்கியே சென்றது. அதனால் ஸ்கோர் போர்டு பிரஷரும் ஏற்பட்டது.

இதையும் படிங்க : IPL 2023 : ரிஷப் பண்ட்டுக்கு பதிலான மாற்று வீரர் இந்தியாவுக்கு கிடைச்சுட்டாரு – ரசிகர்கள் எதிர்பாரா வீரரை பாராட்டும் பீட்டர்சன்

ஒரு கட்டத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சேசிங்கில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் சேசிங் தடம் மாறியது. ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் நாங்கள் முமென்ட்டத்தை மாற்றும்போது விக்கெட்டுகள் விழுந்ததால் இறுதியில் தோல்வியை சந்தித்தோம் என விராட் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement