தன்மீது எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு முதன்முறையாக வாய்திறந்த விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஆசிய கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி மோதும் முதல் போட்டியாக ஆகஸ்ட் 28-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் விளையாட இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் முன்னாள் கேப்டன் விராட் கோலி பார்மிற்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே தனது பேட்டிங்கில் மோசமான சறுக்களை சந்தித்துள்ள விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடருக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.

kohli

- Advertisement -

அதுமட்டும் இன்றி கடந்த ஆறு இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை எனவே விராட் கோலியின் பார்ம் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் மட்டுமே விளையாடிருப்பதால் அவர் இந்த தொடரில் தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

எனவே அவர் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில் விராட் கோலி தன்மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முதல் முறையாக சில கருத்துக்களை வெளியிட்டு அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது : இங்கிலாந்து தொடரில் நான் செய்தது தவறுதான் அதனை ஒப்புக்கொள்கிறேன்.

Kohli

ஆனால் அது நான் கடந்து செல்ல வேண்டிய ஒன்று. நான் நன்றாக பேட்டிங் செய்கிறேன் என்று எனக்கு தெரியும் என்பதால் அதை செயல்படுத்துவது மிகவும் எளிதான விஷயம். சில சமயங்களில் நான் மீண்டும் பார்மிற்கு திரும்பி விட்டதாக உணர தொடங்கும் போது நன்றாக பேட்டிங் செய்வேன். எனக்கு அது ஒரு பிரச்சினையே கிடையாது. ஆனால் இங்கிலாந்தில் என்னால் அது போன்று உணர முடியவில்லை.

- Advertisement -

இங்கிலாந்தில் நான் நன்றாக பேட்டிங் செய்வது போல் எனக்கு தோன்றவும் இல்லை. அது ஒரு கடினமான கட்டம். ஆனால் தற்போது அதனை சமாளித்து கடந்து வந்துள்ளேன். நிச்சயம் இனி வரும் போட்டிகளில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பல்வேறு வகையான பந்துவீச்சுகளை எதிர்கொள்ளும் திறன் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

இதையும் படிங்க : ரொம்ப ஈஸியா சிக்ஸ் அடிக்குறாரு. அவருக்கு 5,6 ஆவது இடத்துலயாவது சேன்ஸ் குடுங்க – முகமது கைப் கோரிக்கை

மோசமான கட்டத்திலிருந்து நான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அந்த வகையில் நான் இந்த கடினமான கட்டத்தில் இருந்து வெளியே வரும்போது எவ்வளவு சீராக விளையாட வேண்டும் என்பது எனக்கு தெரியும். நிச்சயம் எனக்கு கிடைத்த அனுபவங்களை பாடமாக வைத்து இந்த சறுக்கலில் இருந்து மீண்டு வருவேன் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement