ரொம்ப ஈஸியா சிக்ஸ் அடிக்குறாரு. அவருக்கு 5,6 ஆவது இடத்துலயாவது சேன்ஸ் குடுங்க – முகமது கைப் கோரிக்கை

Kaif-and-Rohit-Dravid
Advertisement

இந்திய டி20 அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதால் அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெறுவதில் வீரர்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக சீனியர் வீரர்களுக்கே தங்களது இடத்தை நிரந்தர இடம் என்று உறுதியாக கூற முடியாத அளவிற்கு இந்திய அணியில் இளம் வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணிக்குள் இடம் பிடிக்க நல்ல ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஆசியக் கோப்பை தொடரில் விளையாட காத்திருக்கிறது.

IND vs ZIM Axar Patel

இவ்வேளையில் இதற்கு முன்னதாக ராகுல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட ஒரு அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே தொடரில் அசத்தலான பேட்டிங் செய்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு டாப் 4-ல் வாய்ப்பு அளிக்க முடியவில்லை என்றாலும் 5 அல்லது 6-ஆவது இடத்திலாவது வாய்ப்பு வழங்குங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : சஞ்சீவ் சாம்சன் கடந்த சில ஆண்டுகளாகவே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் போது முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் மட்டும் ஆறு சிக்ஸர்களை அடித்து அசத்தியுள்ளார்.

Sanju Samson 1

இந்திய அணியில் கே.எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முதல் நான்கு வீரர்களாக இருப்பதால் டாப் 4-ல் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது உண்மைதான். அதே வேளையில் சஞ்சு சாம்சன் போன்று ஈஸியாக சிக்ஸ் அடிக்கும் ஒரு வீரர் நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராக இருப்பார்.

- Advertisement -

இந்திய அணியின் பின் வரிசையில் அவர் பேட்டிங் செய்யும் பட்சத்தில் நிச்சயம் அவரால் எந்த ஒரு நேரத்திலும் ஆட்டத்தை திருப்ப முடியும். எனவே ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில், ஏதாவது ஒரு இடத்தில் வாய்ப்பு கொடுங்கள். அவர் தற்போது நல்ல டச்சில் உள்ளார். நான் சஞ்சு சாம்சன் பற்றி புகழ்ந்து கூறவில்லை. ஆனால் அவரிடம் சிக்ஸ் அடிக்கும் திறமை மற்றும் பவர் நிறையவே இருக்கிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

வெகு சிலரிடமே உள்ள இந்த திறமையை நான் அவரிடம் பார்க்கிறேன். மிடில் ஓவரில் கூட அவரால் நல்ல பந்துகளை சிக்ஸருக்கு விரட்ட முடிகிறது. நிச்சயம் அவருக்கு இந்திய டி20 அணியில் ஒரு நிரந்தர இடம் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement