ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

Rohith
- Advertisement -

ஆசிய கிரிக்கெட் அணிகளின் சாம்பியனை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் ஆசியாவின் டாப் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்தத் தொடர் கடந்த 1984 முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக ஒவ்வொரு 2 வருடத்திற்கு ஒரு முறையும் நடத்தப்பட்டு வருகிறது. வரலாற்றில் இதுவரை நடைபெற்றுள்ள 14 தொடர்களில் 7 கோப்பைகளை வென்றுள்ள இந்தியா வெற்றிகரமான அணியாக ஜொலிக்கிறது.

- Advertisement -

இலங்கை 5 கோப்பைகளையும் பாகிஸ்தான் 2 கோப்பைகளையும் வென்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு அணிகளுக்கு காலம் காலமாக சவாலாக இருந்து வரும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய அணிகள் தங்களுக்கு பழக்கப்பட்ட கால சூழ்நிலைகளில் இந்த கோப்பையை வெல்வதற்கு மோதுவதால் இந்த தொடரின் பெரும்பாலான போட்டிகள் பரபரப்பாக இருந்து வருகிறது.

சிக்ஸர் நாயகன்கள்:
அதே சமயம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் கூட உருவாக்காத அதிரடி நாயகன்களை உருவாக்கி கிரிக்கெட்டுக்கு பரிசளித்த இந்த ஆசிய அணிகள் மோதும் போது அதில் தங்களது நாட்டுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க அந்தந்த நாடுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடவும் தவறுவதில்லை. அந்த வகையில் ஆசிய கோப்பை வரலாற்றில் தங்களது அதிரடியான பேட்டிங் திறமையால் அதிக சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ வைத்து தங்களது நாட்டின் வெற்றியில் பங்காற்றிய டாப் 5 பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்:

5. எம்எஸ் தோனி 16: மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் இவர் இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பையை வென்று கொடுத்தது போல் 2010, 2016 ஆகிய வருடங்களில் 2 ஆசிய கோப்பைகளையும் வென்று அசத்தியுள்ளார். பொதுவாகவே அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய இவர் மிடில் ஆர்டரில் விளையாடியும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2வது இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளது அவரின் திறமைக்கு சான்றாகும்.

- Advertisement -

அந்த வகையில் 2008 – 2018 வரை பங்கேற்ற ஆசிய கோப்பையில் 20 இன்னிங்சில் களமிறங்கிய அவர் 16 சிக்ஸர்களை விளாசி இந்தப் பட்டியலில் 5வது இடம் பிடிக்கிறார்.

raina

4. சுரேஷ் ரெய்னா 18: இந்தியாவின் ஸ்டைலிஷ் இடதுகை பேட்ஸ்மேனான இவர் 2010 காலகட்டத்தில் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக நிறைய சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

2008 – 2016 வரையிலான காலகட்டத்தில் ஆசிய கோப்பையில் 18 போட்டிகளில் 16 இன்னிங்சில் களமிறங்கிய அவர் 2 சதங்கள் 3 அரை சதங்கள் உட்பட 586 ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அதேபோல் 18 சிக்சர்களை அடித்து இந்த பட்டியலில் 4வது இடம் பிடிக்கும் அவர் 52 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார்.

Rohith

3. ரோஹித் சர்மா 21: 2018 ஆசிய கோப்பையை கேப்டனாக வென்ற இவர் இம்முறை இந்தியாவின் முழுநேர கேப்டனாக சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க களமிறங்க உள்ளார். உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அசால்டாக சிக்சர் அடிக்கும் திறமை பெற்றுள்ள இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த ஆசிய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2008 முதல் இதுவரை பங்கேற்ற 26 இன்னிங்சில் 21 சிக்ஸர்களை விளாசி ஆசிய கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இவர் இந்த பட்டியலில் 3வது இடம் பிடிக்கிறார்.

Jayasuriya

2. சனாத் ஜெயசூரியா 23: 90களில் எதிரணி பவுலர்களை தனது அதிரடியான பேட்டிங்கால் புரட்டி எடுத்த இவர் வரலாற்றில் இலங்கை கண்ட மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார்.

1990 – 2008 வரை அதிரடியாக பேட்டிங் செய்து ஆசிய கோப்பையில் அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இவர் 24 இன்னிங்சில் 23 சிக்சர்களை அடித்து ஆசிய கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த இலங்கை பேட்ஸ்மேனாக இந்த பட்டியலில் 2வது பிடிக்கிறார்.

Afridi

1. ஷாஹித் அப்ரிடி 26: அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்வதில் புகழ்பெற்ற இவர் வரலாற்றில் பாகிஸ்தானின் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாகவும் சிக்ஸர் கிங்காகவும் எதிரணிகளை தெறிக்க விட்டார் என்றே கூறலாம். 1997 – 2016 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பைகளில் 23 இன்னிங்சில் களமிறங்கிய அவர் 26 சிக்ஸர்களை விளாசி ஆசிய கோப்பையில் அதிக ரசிகர்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

மேலும் 534 ரன்களை 139.79 என்ற அதிரடியாக ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ள அவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ஸ்டிரைக் ரேட்டில் (குறைந்தது 500 ரன்கள்) ரன்களை விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

Advertisement