மைதானத்தின் தன்மையை பாத்த அப்புறம் தான் நான் அந்த முடிவையே எடுத்தேன் – ஆட்டநாயகன் விராட் கோலி

Virat-Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று கவுஹாத்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

INDvsSL

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரோடு இணைந்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அரை சதம் அடித்ததால் இந்திய அணி நல்ல ரன் குவிப்பிற்கு சென்றது.

பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை மட்டுமே குவித்ததால் 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமான சதம் விளாசி அசத்திய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பின்னர் போட்டி முடிந்து அவரது இந்த ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி கூறுகையில் :

Virat Kohli

நான் என்னுடைய எந்த டெக்னிக்கையும் மாற்றிக் கொள்ளவில்லை. வழக்கமாக எப்படி நான் விளையாடுவேனோ அதேபோன்று இந்த போட்டியிலும் மகிழ்ச்சியுடன் களமிறங்கி விளையாடினேன். நான் விளையாடிய போது பந்து நன்றாக பேட்டில் பட்டதால் என்னால் சிறப்பாக ரன்களை குவிக்க முடிந்தது. அதேபோன்று நான் மைதானத்தில் களமிறங்கிய உடனே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததை உணர்ந்தேன்,

- Advertisement -

எனவே தான் நாம் அடிக்கும் ரன்களை விட கூடுதலாக 25 ரன்கள் முதல் 30 ரன்கள் வரை அடிக்க வேண்டும் அப்போதுதான் அணியின் வெற்றிக்கு போதுமானதாக இருக்கும் என்று முடிவு செய்தேன். அந்த வகையில் மைதானத்தின் தன்மையை முன்கூட்டியே அறிந்து கொண்டதால் அதற்கு ஏற்றார் போல எங்களால் சிறப்பாக விளையாட முடிந்தது. இறுதியில் நாங்கள் நினைத்ததை விட சற்று கூடுதலாகவும் எங்களுக்கு ரன்கள் கிடைத்தது. அதன் காரணமாகவே இந்த போட்டியில் நாங்கள் வெற்றியும் பெற்றுள்ளோம் என்று விராட் கோலி கூறினார்.

இதையும் படிங்க : IND vs SL : மேட்ச் ஜெயிச்சிருந்தாலும் நாங்க இப்படி பண்ணியிருக்க கூடாது – வெற்றிக்கு பின் ரோஹித் பேசியது என்ன?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்த போட்டியில் களமிறங்கும் போது எந்தவித பயமும் இல்லாமல் தான் களமிறங்கினேன். ஒவ்வொரு போட்டியிலும் நான் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். அந்த வகையில் இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement