RCB vs SRH : நல்ல ஸ்டார்ட் கிடைக்கும்னு நெனச்சேன். ஆனா இப்படி நடக்கும்னு நினைக்கல – ஆட்டநாயகன் விராட் கோலி மகிழ்ச்சி

Kohli 1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 65 ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

Kohli

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தனர். பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 19.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து 187 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த துவக்க வீரர் விராட் கோலி ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார். இந்த போட்டியில் 63 பந்துகளை சந்தித்த விராட் கோலி 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 100 ரன்கள் குவித்து அசத்தினார்.

Faf and Kohli

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய ஆட்டநாயகன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டியில் நான் சிறப்பாக விளையாடியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. சன்ரைசர்ஸ் ஒரு நல்ல ஸ்கோரை தான் எங்களுக்கு இலக்காக நிர்ணயித்தார்கள்.

- Advertisement -

நாங்கள் நிச்சயம் நல்ல தொடக்கத்தை கொடுக்க விரும்பினோம். ஆனால் இவ்வளவு பெரிய பார்ட்னர்ஷிப் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு நாங்கள் 172 ரன்கள் சேர்த்தது மிகச் சிறப்பாக இருந்தது. இந்த தொடர் முழுவதுமே நானும் டூப்ளிசிசும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். எங்களது பாட்னர்ஷிப் சிறப்பாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : அப்டினா சிஎஸ்கே சோளி முடிஞ்ச்சா? சென்னையை வீழ்த்த ஸ்பெஷல் திட்டத்துடன் களமிறங்கும் டெல்லி – ரசிகர்கள் கவலை

இந்த சீசனில் டூப்ளிசிஸ் வேற லெவலில் விளையாடி வருகிறார். கடைசியாக இரண்டு மூன்று போட்டிகளில் எனக்கு கிடைத்த துவக்கத்தை பெரிய இன்னிங்ஸ்ஸாக மாற்ற முடியவில்லை. இந்த போட்டியில் நான் அதனை பெரிய இன்னிங்ஸ்ஸாக மாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement