18 என்கிற நம்பரை நான் கேட்டு பெறவில்லை. தனது ஜெர்சி எண் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய – விராட் கோலி

18-Virat
- Advertisement -

கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஜெர்சியில் தங்களது பிடித்த ஒரு நம்பரை பதிந்து விளையாடுவது வழக்கம். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் சில வீரர்களது ஜெர்சி எண்கள் மட்டும் ஞாபகம் இருக்கும். குறிப்பாக சச்சினின் 10, கங்குலியின் 99, தோனியின் 7 போன்ற எண்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். அந்த வகையில் விராட் கோலியின் ஜெர்சி எண்ணான 18-ம் அனைவரது மத்தியிலும் அதிகளவு வரவேற்பினை பெற்றுள்ளது.

18

- Advertisement -

இந்நிலையில் அந்த ஜெர்சி எண் 18 தனக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விராத் கோலி தற்போது வெளிப்படையான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் எதிர்வரும் மே 21-ஆம் தேதியோடு முடிவடைய இருக்கின்றன.

இந்த ஐ.பி.எல் தொடரில் இதுவரை குஜராத் அணியை தவிர்த்து மற்ற அணிகள் பிளே ஆப் சுற்றுக்கான தங்களது இடத்தினை உறுதி செய்யும் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

Kohli

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூரு அணி தங்களது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் என்பதால் இந்த போட்டி ஆர்.சி.பி அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பெங்களூரு அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தனது ஜெர்சி எண்ணான 18 குறித்த ரகசியத்தை மனதிறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : 18 என்கிற நம்பர் ஜெர்ஸ்ஸியை நானாக கேட்டுப் பெறவில்லை. நான் இந்திய அணிக்காக விளையாட அறிமுகமான போது அவர்களாக எனக்கு கொடுத்த எண் அது. ஆனால் அந்த என் வாழ்வின் ஒரு முக்கிய எண்ணாக மாறிவிட்டது.

இதையும் படிங்க : IPL 2023 : அதிரடியா விளையாடியும் அவர யாருமே கண்டுக்கல, இந்திய அணியில் சான்ஸ் கொடுங்க – சிஎஸ்கே வீரருக்கு ஆகாஷ் சோப்ரா ஆதரவு

ஏனெனில் நான் இந்திய அணிக்காக அறிமுகமாகியது ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி தான், அதேபோன்று என் அப்பா இறந்ததும் டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி தான். அதைப் போன்று என் வாழ்வின் முக்கிய தருணங்களில் இந்த 18 பலமுறை வந்துள்ளது. பின்னர் அதுவே என்னுடைய லக்கி நம்பராகவும் மாறிப்போனது என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement