IPL 2023 : அதிரடியா விளையாடியும் அவர யாருமே கண்டுக்கல, இந்திய அணியில் சான்ஸ் கொடுங்க – சிஎஸ்கே வீரருக்கு ஆகாஷ் சோப்ரா ஆதரவு

Chopra
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது அணிக்கு கோப்பையை வெல்வதற்காக முழு திறமையை வெளிப்படுத்தி இந்தியாவுக்காகவும் விளையாடும் லட்சியத்துடன் நிறைய இளம் இந்திய வீரர்கள் அசத்தலாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ராஜஸ்தான் அணியில் அதிவேகமாக அரை சதமடித்து 575 ரன்களை விளாசி அசத்தும் யசஸ்வி ஜெய்ஸ்வால், 5 சிக்ஸர்களை விளாசி கொல்கத்தாவுக்கு சில அசாத்தியமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து லேட்டஸ்ட் ஃபினிசாராக உருவெடுத்துள்ள ரிங்கு சிங், பஞ்சாப் அணியில் விக்கெட் கீப்பராக அசத்தும் ஜித்தேஷ் சர்மா போன்றவர்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டி ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

Shuvam Dube Robin Uthappa

- Advertisement -

இருப்பினும் அவர்களைப் போலவே சென்னை அணியில் அசத்தி வரும் சிவம் துபேவை யாரும் பாராட்டுவதில்லை என்றே சொல்லலாம். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் ஓரளவு கவனம் ஈர்க்கும் வகையில் அசத்தியதால் 2019இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் விளையாடினார். இருப்பினும் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான், பெங்களூரு போன்ற அணிகளில் சொதப்பலாகவே செயல்பட்டார்.

கம்பேக் வாய்ப்பு:
ஆனால் சென்னை அணிக்கு கடந்த வருடம் வாங்கப்பட்டு தோனி தலைமை அசத்தும் நிறைய வீரர்களில் ஒருவராக உருவெடுத்த அவர் 289 ரன்களை அடித்து இந்த சீசனில் தனது கேரியரில் உச்சகட்டமாக 11 இன்னிங்ஸில் 363* ரன்களை 157.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வருகிறார். அதை விட தோனி, ஜடேஜா, ருதுராஜ் போன்ற இதர சென்னை வீரர்களை மிஞ்சும் வகையில் 30 சிக்ஸர்களை அடித்துள்ள அவரை சிக்ஸர் மெஷின் என அந்த அணி ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதிலும் அழுத்தமான (7 – 15) மிடில் ஓவர்களில் 254 ரன்களை 155 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ள அவர் 22 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.

chopra

மொத்தத்தில் இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2வது வீரராக கிளன் மேக்ஸ்வெல், டு பிளேஸிஸ் (தலா 30) ஆகியோருடன் தனது பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ள சிவம் துபே சராசரியாக ஒவ்வொரு 7.7 பந்துக்கு ஒரு முறை சிக்ஸர்களை அடிக்கிறார். ஆனாலும் ஜெய்ஸ்வால், ரிங்கு, மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் அளவுக்கு அவர் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த காலங்களை விட நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள சிவம் துபேவுக்கும் இதே போல் விளையாட்டினால் தாராளமாக இந்திய டி20 அணியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் வருங்கால இளம் வீரர்கள் பட்டியலில் அவருடைய பெயரும் நன்றாகவே இடம் பெறலாம். இந்த சீசனில் அவர் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட விரும்பும் பிராண்டை இந்தியா பின்பற்ற நினைத்தால் நிச்சயமாக சிவம் துபேவும் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் சிறப்பாக சிக்சர்களை அடிக்கிறார். குறிப்பாக இந்த சீசனில் அவர் சில சிறந்த சிக்சர்களை அடித்துள்ளார். எனவே அவருடைய பெயரையும் இந்திய அணியின் பட்டியலில் சேருங்கள்” என்று கூறினார்.

Shivam Dube Robin Uthappa

முன்னதாக சுமாரான ஃபிட்னெஸ் மற்றும் வேகபந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறிய சிவம் துபே தற்போது சிறப்பாக முன்னேறியுள்ளதாக பாராட்டும் மற்றொரு முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இது பற்றி பேசியது பின்வருமாறு. “துபே தன்னுடைய விளையாட்டு மற்றும் பிட்னஸில் மிகவும் உழைத்துள்ளார். கடந்த வருடத்தை விட அவர் தற்போது நிறைய உழைப்பை போட்டுள்ளார்”

இதையும் படிங்க:DC vs PBKS : கடைசி பந்துவரை அவரு எங்களுக்கு பயத்தை காமிச்சிக்கிட்டே இருந்தாரு – ஆட்டநாயகன் ரைலி ரூஸோ பேட்டி

“குறிப்பாக கடந்த காலங்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறிய அவர் முன்னேறியுள்ளது பாராட்டதக்கது. இப்போதெல்லாம் அவர் ஒரே இடத்தில் நின்றாலும் சற்று உள்நோக்கி சென்று ஃபுல் மற்றும் ஹூக் ஷாட்களை அடிக்கிறார். தோனி தலைமையில் விளையாடுவது அவருக்கு நிறைய தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement