DC vs PBKS : கடைசி பந்துவரை அவரு எங்களுக்கு பயத்தை காமிச்சிக்கிட்டே இருந்தாரு – ஆட்டநாயகன் ரைலி ரூஸோ பேட்டி

Rilee Rossouw
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Rilee Rossouw 1

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பாக ரைலி ரூஸோ 82 ரன்களையும், துவக்க வீரரான ப்ரித்வி ஷா 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே குவித்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைலி ரூஸோ 37 பந்துகளை சந்தித்த 6 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் என 82 ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Livingstone

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ரைலி ரூஸோ கூறுகையில் : எங்களது அணியில் உள்ள சப்போர்ட் ஸ்டாப்புகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஏனெனில் என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் எனக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளையும் வழங்கி வந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியில் டேவிட் வார்னர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்தார். அவர் அளித்த பார்ட்னர்ஷிப் துவக்கத்திலேயே எங்கள் அணியை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு நான் உள்ளே வந்ததும் என்னுடைய ஆட்டத்தை ரசித்து விளையாடினேன். இந்த போட்டியில் எனது ஆட்டம் முழுமையாக திருப்தி அளிக்கும் வகையாக இருந்தது.

இதையும் படிங்க : IPL 2023 : அவர எதிர்த்து விளையாடுவது கஷ்டம், ஒன்னா ஒரே டீமில் இருப்பதே ஈஸி – இந்திய நட்சத்திர வீரரை பாராட்டிய டு பிளேஸிஸ்

அதேபோன்று இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கடைசி வரை களத்தில் நின்றதனால் கடைசி பந்து வரை வெற்றிக்கு நாங்கள் போராட வேண்டியதாக ஆகியது என ரைலி ரூஸோ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement