இந்த சீசன் முழுவதுமே எனக்கு அந்த வருத்தம் இருந்தது. குஜராத் அணிக்கெதிரான அதிரடிக்கான – காரணத்தை கூறிய கோலி

kohli
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடிய பெங்களூரு அணியானது அட்டகாசமான வெற்றியை பெற்று தங்களது பிளே ஆப் வாய்ப்பினை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த போட்டியில் அருமையாக விளையாடிய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் விளாசி பெங்களூரு அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். அனைத்து விதமான கேப்டன் பொறுப்பில் இருந்தும் வெளியேறிய விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 13 போட்டிகளில் பெரிய அளவில் தனது அதிரடியை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

Virat Kohli Du Plessis RCB vs GT 2

- Advertisement -

இந்நிலையில் முக்கியமான நேற்றைய கடைசி ஆட்டத்தில் தனது அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். முக்கியமான கட்டத்தில் அவரிடம் இருந்து ரன்கள் வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த குஜராத் அணிக்கு எதிரான அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு தனது பேட்டிங் குறித்து போட்டி முடிந்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த சீசனில் எனது தரப்பில் இருந்து பெரிய அளவில் அணிக்கு பங்களிப்பு பங்களிப்பினை வழங்க முடியவில்லை என்கிற வருத்தம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் இந்த கடைசி இன்னிங்சில் என்னால் அணிக்கு தரமான பங்களிப்பினை வழங்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Virat Kohli vs GT

இந்த போட்டியில் நான் ஷமிக்கு எதிராக முதல் ஷாட் ஆடியோ போதே எனக்கு பந்தை அடித்து ஆடலாம் என்று தெரிந்துவிட்டது. போட்டிக்கு முன்னதாக 90 நிமிடங்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டேன். மேலும் இந்த போட்டியில் நான் மிகவும் ரிலாக்சாக போட்டியை அணுகியதால் என்னால் அதிரடியாக விளையாட முடிந்தது என்று விராட் கோலி கூறியுள்ளார்.

- Advertisement -

குஜராத் அணிக்கு எதிரான இந்த முக்கியமான லீக் போட்டியில் 54 பந்துகளை சந்தித்த அவர் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என 73 ரன்களை குவித்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்தார். அதோடு டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 7,000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் விராட்கோலி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆரஞ்சு தொப்பி வச்சிருக்க நீங்களா இதை கேக்குறீங்க – ஜாஸ் பட்லரை கிண்டல் செய்த விராட் கோலி

தற்போது 14 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள பெங்களூரு அணியானது 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 அணிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக நடைபெறும் போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement