ஆரஞ்சு தொப்பி வச்சிருக்க நீங்களா இதை கேக்குறீங்க – ஜாஸ் பட்லரை கிண்டல் செய்த விராட் கோலி

Kohli
- Advertisement -

கேப்டன்சி அழுத்தம் காரணமாகவே விராத் கோலியின் பேட்டிங் பார்ம் பெரிய அளவில் சரிவை சந்தித்து இருக்கிறது என்று அனைவரும் கூறிய வேளையில் அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறிய விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் இல்லாமல் தவித்து வரும் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் ரன் மழை பொழிந்து நிச்சயம் பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Virat Kohli Du Plessis RCB vs GT

- Advertisement -

ஆனால் இந்த ஐபிஎல் தொடரிலும் அவரது பேட்டிங் பார்ம் சுமாராகவே இருந்தது. நேற்று நடைபெற்று முடிந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த விராட் கோலி 54 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 73 ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார்.

முக்கியமான போட்டியில் மீண்டும் தான் ஒரு சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் கோலி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது ஆர்சிபி அணிக்கு மட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் மகிழ்ச்சியளிக்கும் விடயமாக மாறியுள்ளது.

buttler

இந்நிலையில் நேற்றைய ஆட்ட நேரம் முடிந்து ஜோஸ் பட்லர் உடனான உரையாடல் குறித்த சுவாரசியமான சம்பவத்தை விராத் கோலியுடன் நிகழ்ச்சி ஒன்றில் ஹர்பஜன் சிங்குடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ஜோஸ் பட்லர் என்னிடம் வந்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று வினவினார். அப்போது நான் அவரிடம் நீங்கள் ஆரஞ்சு தொப்பியை வைத்து இருக்கிறீர்கள். நான் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறி வருகிறேன். என்னிடம் நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று கிண்டல் செய்தேன். அதன் பின்னர் இருவரும் சிரித்தோம் மேலும் எங்களுடைய உரையாடல் சிறிது நேரம் தொடர்ந்து. அப்போது அவர் பேட்டிங்கில் சிறிய சிறிய நுணுக்கங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்தும் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : இந்திய கேப்டனா கங்குலி அதை சரியாக செய்தார், ஆனால் விராட் கோலி செய்தாரா தெரியல – முன்னாள் வீரர் பேச்சு

மேலும் பேட்டிங்கை பற்றி நாங்கள் அதிகமாக விவாதித்துக் கொண்டும் என விராட் கோலி கூறியுள்ளார். இந்த நடப்பு ஐ.பி.எல் சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜாஸ் 13 போட்டிகளில் 627 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement