இந்திய கேப்டனா கங்குலி அதை சரியாக செய்தார், ஆனால் விராட் கோலி செய்தாரா தெரியல – முன்னாள் வீரர் பேச்சு

Ganguly
- Advertisement -

உலக அளவில் இன்று இந்தியா இன்றியமையாத ஒரு நம்பர் ஒன் அணியாக ஜொலிப்பதற்கு கடந்த பல வருடங்களாக அதை வழிநடத்திய கேப்டன்கள் முக்கிய காரணமாவார்கள். இருக்கும் வீரர்களை வைத்து எதிரணியை தோற்கடித்து அன்றைய நாளில் வெற்றி பெறுவது மட்டுமே ஒரு கேப்டனின் வேலை கிடையாது. இன்றைய நாளில் இருந்து கொண்டு அடுத்த வருடத்தில் நடைபெறும் உலகக் கோப்பையை எப்படி வெற்றி பெறலாம், அதற்கு யாரை தேர்வு செய்யலாம், அதற்குள் எந்த தரமான இளம் வீரருக்கு வாய்ப்பளித்து சொதப்பினாலும் ஆதரவை கொடுக்கலாம் என்பது போன்ற நிறைய வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.

Dhoni

- Advertisement -

மேலும் இந்தியா போன்ற கிரிக்கெட்டை உயிராக கொண்டாடும் ரசிகர்களை கொண்ட அணிக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே நீண்ட நாட்களாக கேப்டனாக இருக்க முடியும். அப்படி வரலாற்றில் நிறைய கேப்டன்கள் வந்து போயிருந்தாலும் கபில்தேவ், முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி எம்எஸ் தோனி, விராட் கோலி போன்ற சிலர் மட்டுமே நீண்ட நாட்கள் கேப்டன்ஷிப் செய்து இந்தியாவிற்கு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தனர்.

அப்படி ஒரு கேப்டன் பல வருடங்கள் அணியை வழிநடத்தும் போது தாமாகவே ஒரு சகாப்தம் உருவாகிவிடும். அந்த சகாப்தத்தில் அவர் ஆதரவளித்து வளர்த்த நிறைய வீரர்கள் வெற்றிக்கு பங்காற்றுவார்கள் என்றாலும் கேப்டனாக அவர் விடைபெறும் போது அடுத்த தலைமுறையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை தேடித் தரக் கூடிய இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்த்து அடுத்ததாக பொறுப்பேற்கும் கேப்டனிடம் கொடுப்பது இன்றியமையாத கடமையாகும்.

Ganguly

தரமான கங்குலி:
அந்த வகையில் 2000இல் சூதாட்டப் புகாரில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாஹீர் கான், எம்எஸ் தோனி போன்ற நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக தரமான இந்திய அணியை உருவாக்கி ஆஸ்திரேலியா போன்ற வலுவாக அணிக்கும் சவாலை கொடுக்கும் வகையில் வெற்றி நடை போட வைத்தார். ஒரு கட்டத்தில் அவர் ஓய்வு பெற்றபோது அடுத்த கேப்டனாக வந்த எம்எஸ் தோனி தலைமையில் அவர் வளர்த்த வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாலேயே 2007, 2011 ஆகிய வருடங்களில் இந்தியா உலக கோப்பையை வென்றது.

- Advertisement -

அதேபோல் கேப்டனாக தோனி பல வருடங்கள் இருந்தபோது ரோகித் சர்மா, விராட் கோலி, தவான், ஜடேஜா, அஸ்வின் என இப்போதைய இந்திய அணியில் விளையாடும் முக்கால்வாசி சூப்பர் ஸ்டார் வீரர்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் நிறைய வாய்ப்பையும் ஆதரவையும் வழங்கி வருங்காலத்தில் தரமான இந்திய அணியை உருவாக்கி விட்டுச் சென்றார். இருப்பினும் தோனிக்கு பின்பு கேப்டனாக 2014 முதல் டெஸ்டிலும் 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி அந்த வேலையை சரியாக செய்தாரா என்று உறுதியாக கூற முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Ganguly

உறுதியாக தெரியல:
ஒரு அணியை உருவாக்கி அவர்களுக்கு ஆதரவு அளித்த கங்குலி போல விராட் கோலி நடந்து கொண்டாரா என்று தமக்கு உறுதியாக என தெரியவில்லை என்று கூறும் வீரேந்திர சேவாக் தம்மைப் பொருத்தவரை கங்குலி நான் என்றுமே நம்பர் ஒன் கேப்டன் என்று கூறியுள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சௌரவ் கங்குலி ஒரு புதிய அணியை உருவாக்கி புதிய வீரர்களை கொண்டு வந்து அவர்களின் உச்சத்திலும் வீழ்ச்சியிலும் ஒரேமாதிரியான ஆதரவை கொடுத்தவர். இருப்பினும் விராட் கோலி அந்த வேலையை செய்தாரா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. என்னைப் பொருத்தவரை ஒரு அணியை உருவாக்கி தனது அணியில் விளையாடும் வீரர்களுக்கு தன்னம்பிக்கையையும் ஆதரவையும் வழங்குபவரே என நம்பர் ஒன் கேப்டன் ஆவார். அந்த வகையில் விராட் கோலி சில வீரர்களுக்கு ஆதரவளித்தார், சிலருக்கு அளிக்கவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

இருப்பினும் கடந்த 2014இல் கேப்டனாக பொறுப்பேற்றபோது ஐசிசி தரவரிசையில் 7-வது இடத்தில் தவித்த இந்தியாவை தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வர வைத்த பெருமை விராட் கோலியை சேரும் என்பதில் சந்தேகமில்லை.

kohli

குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பி சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறக்கூடிய அணியாக இருந்த இந்தியாவை கங்குலி, தோனி போன்ற இதர கேப்டன்களைக் காட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவும் வாய்ப்பையும் அளித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எதிரணிகளை மிரட்ட கூடிய வெற்றிகரமான அணியாக மாற்றிய பெருமையும் அவரையே சேரும்.

இதையும் படிங்க : நிச்சயமா தோனிக்கிட்ட இன்னைக்கு அந்த கேள்வி கேப்பாங்க – என்ன சொல்ல போறாரோ?

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஒரு உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 வெற்றிகளைப் பெற்று இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement