நிச்சயமா தோனிக்கிட்ட இன்னைக்கு அந்த கேள்வி கேப்பாங்க – என்ன சொல்ல போறாரோ?

Dhoni
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் கடைசி லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஒன்பதாம் இடம் பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இதன்காரனாமாக இன்று தங்களது கடைசி போட்டியில் சென்னை அணி பங்கேற்கவுள்ளது.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி போட்டியில் இன்று விளையாடும் சென்னை அணியில் சீனியர் வீரர்களுக்கு கடந்த போட்டியில் ஓய்வு கொடுத்தது போலவே இந்த போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணியில் நிச்சயம் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு அடுத்த ஆண்டு சென்னை அணியை எவ்வாறு தயார்படுத்த போகிறார்கள் என்பது குறித்தும் இந்த போட்டியின் போது முடிவு செய்யப்படும். தற்போது 40 வயதைத் தொட்டுவிட்ட தோனிக்கு அடுத்த சீசனில் பங்கேற்பதற்கு முன்னர் 41 வயது ஆகிவிடும் என்பதனால் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவாரா? என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

cskvsrr

இருப்பினும் இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணியின் கேப்டனாக களமிறங்கும் தோனியிடம் நிச்சயமாக டாசின் போது அடுத்த ஆண்டிற்கான இலக்கு என்ன என்பது குறித்த கேள்வி கேட்கப்படும். அதாவது தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? அல்லது விளையாட மாட்டாரா? என்பது குறித்த கேள்வி கேட்கப்படும்.

- Advertisement -

அந்த வகையில் டாசின் போதே அவரது அடுத்த ஆண்டிற்கான திட்டம் என்ன என்பதனை தோனி இன்று அறிவித்து விடுவார். அதனால் தோனியின் நிலை அடுத்த ஆண்டு என்ன என்பது குறித்து இன்றைய போட்டிக்கு முன்னர் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க : உங்களத்தான் நம்பி இருக்கோம், கை விட்றாதீங்க ! மும்பைக்கு ஆர்சிபி கேப்டன், விராட் – ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை

இன்றைய போட்டியின் டாஸின் போது நிச்சயம் தோனி தனது எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்வார் என்பதனால் டாஸிற்கு பிறகு தோனி என்ன பேசப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இருப்பினும் அடுத்த ஆண்டில் தோனி நிச்சயம் விளையாட வேண்டும் என்றும் அவர் இன்றைய டாசின் போதே அதை உறுதி செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement