வீடியோ : 40 மாதங்கள் என்னை தின்று விட்டது, சரியான நேரத்தில் சதமடிச்சுருக்கேன் – ராகுல் டிராவிட்டுக்கு விராட் கோலி உறுதி

Rahul Dravid Virat Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வந்த 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி நிரூபித்து நியூசிலாந்தின் உதவியுடன் 2023 ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறியதற்காக சந்தித்த விமர்சனங்களுக்கு 2022 ஆசிய கோப்பையில் 1020 நாட்கள் கழித்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து முற்றுப்புள்ளி வைத்தார்.

அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடிய அவர் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் 1116 நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் சதமடித்தார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த அவர் இத்தொடரின் முதல் 3 போட்டிகளில் 44 ரன்கள் வரை எடுத்தும் துரதிஷ்டவசமாகவும் சில சமயங்களில் நடுவரின் தவறான தீர்ப்பாலும் அவுட்டானார். அந்த நிலையில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் ஒரு வழியாக 1205 நாட்கள் கழித்து 186 ரன்கள் விளாசி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

- Advertisement -

தின்று விட்டது:
குறிப்பாக என்ன தான் பிட்ச் பிளாட்டாக இருந்தாலும் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு மதிப்பு கொடுத்து 394 பந்துகள் எதிர்கொண்டு தனது கேரியரில் 2வது பெரிய இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவுக்கு 91 ரன்கள் முன்னிலை பெற்றுக் கொடுத்த அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்நிலையில் அப்போட்டியில் 40 ரன்கள் எடுத்த போது 150 ரன்கள் எடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்ததாக தெரிவிக்கும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 மாதங்களாக சதமடிக்காமல் இருந்தது தம்மை மனதளவில் தின்று விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக சரியான நேரத்தில் வந்துள்ள இந்த சதம் தன்னம்பிக்கை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இதே புத்துணர்ச்சியுடன் ஃபைனலில் கோப்பையை வெல்ல போராடுவேன் என்று பயிற்சி தலைவர் ராகுல் டிராவிட்டிடம் உறுதி பட தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜாம்பவான்களான அந்த இருவரும் அகமதாபாத் போட்டிக்கு நேரடியாக பேட்டி எடுத்துக் கொண்ட போது ராகுல் ட்ராவிட் பேசியது பின்வருமாறு. “நான் பயிற்சியாளராக வந்தது முதல் நீங்கள் இந்த சதத்துக்காக என்னை நீண்ட நாட்களாக காத்திருக்க வைத்து விட்டீர்கள். இருப்பினும் இந்த சிறப்பான இன்னிங்ஸை நீங்கள் அழகாக கட்டமைத்து விளையாடியதை பார்த்தது என்னுடைய கௌரவமாகும்”

- Advertisement -

“கேப் டவுனில் 70 ரன்கள் அடித்தது போன்ற உங்களுடைய இன்னிங்ஸ்களை பார்த்து மகிழ்ந்தேன். இருப்பினும் இந்த காலங்களில் சதமடிக்காமல் இருந்தது உங்களது மனதில் கவலையை கொடுத்ததா” என்று கூறினார். அதற்கு பதிலளித்த விராட் கோலி பேசியது பின்வருமாறு. “நன்றி ராகுல் பாய். 3 இலக்க ரன்களை தொட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அனைத்து பேட்ஸ்மேன்களும் வளர்வார்கள். அது எனக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நடக்க அனுமதித்தேன். இருப்பினும் நான் 40 – 45 ரன்கள் எடுத்ததும் மகிழ்ச்சியடைபவன் அல்ல. அணிக்காக பெரிய ரன்களை எடுத்து சிறப்பாக செயல்படுவதில் பெருமிதம் கொள்பவன். இந்த போட்டியில் நான் 40 ரன்கள் இருந்த போது 150 ரன்கள் எடுக்க முடியும் என்பது தெரியும்”

“அதற்காக நான் சதம் மற்றும் சாதனைகளுக்காக விளையாடுபவனும் அல்ல. இருப்பினும் ஏன் எனது அணிக்காக என்னால் பெரிய ரன்களை எடுக்க முடியவில்லை? என்ற எண்ணம் என்னை நிறைய தின்று விட்டது. ஏனெனில் அணிக்கு தேவைப்படும் போது கடினமான சூழ்நிலைகளிலும் நான் எழுந்து நின்று சதமடிப்பதில் பெருமிதம் கொண்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் அதை செய்ய முடியவில்லை என்பது கவலையை கொடுத்தது”

இதையும் படிங்க: IND vs AUS : கடந்த 10 வருஷமா இந்திய மண்ணில் தொடர்ந்து ஜெயிக்க அந்த 2 பேரும் தான் காரணம் – ரோஹித் சர்மா ஓப்பனாக பாராட்டு

“எனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக வந்துள்ள இந்த சதத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். இதன் காரணமாக அந்த ஃபைனலில் நான் மிகவும் ரிலாக்ஸாகவும் ஆர்வமாகவும் வெற்றிக்காக விளையாட உள்ளேன்” என்று கூறினார்.

Advertisement