மீண்டும் சிங்கமாக போராடி வீழ்ந்த கிங் கோலி – சச்சின், சங்கக்காரா, பிரைன் லாராவை முந்தி படைத்த 5 உலக சாதனைகள் இதோ

Virat Kohli IND vs ENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் வழக்கம் போல சொதப்பிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று பரிதாபமாக வெளியேறியது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 168/2 ரன்களை சேர்த்தது.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

ராகுல் 5, கேப்டன் ரோஹித் சர்மா 27, சூரியகுமார் யாதவ் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக விராட் கோலி 50 (40) ரன்களும் ஹர்டிக் பாண்டியா அதிரடியாக 63 (33) ரன்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் 80* (49) அலெக்ஸ் ஹேல்ஸ் 86* (47) என தொடக்க வீரர்களே சுமாராக பந்து வீசிய இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 170/0 ரன்களை எடுக்க வைத்து பைனலுக்கு அழைத்துச் சென்றனர்.

போராடி வீழ்ந்த சிங்கம்:

இப்போட்டியில் மோசமான பவுலிங் மற்றும் ஓப்பனிங் ஜோடியின் படுமோசமான ஆட்டத்தால் இந்தியா தோல்வியை சந்தித்த காரணத்தால் முழுமூச்சுடன் போராடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியின் போராட்டம் மண்ணாகிப் போனது. அதிலும் முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தத அவர் மொத்தம் 296 ரன்களை விளாசி இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். ஆனால் இதர வீரர்களின் சொதப்பலால் சிங்கத்தைப் போல் போராடிய அவர் இறுதியில் கோப்பையை வெல்ல முடியாமல் வீழ்ந்து விட்டார் என்றே கூறலாம்.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

1. முன்னதாக ஏற்கனவே 2014, 2016 டி20 உலக கோப்பைகளிலும் இதே போல் தனி ஒருவனாக போராடி அதிக ரன்கள் குவித்தும் இதர வீரர்களின் சொதப்பலால் கோப்பையை தொட முடியாமல் ஏமாற்றமடைந்த அவர் இப்போட்டியில் அடித்த 50 (40) ரன்களையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 4008*
2. ரோஹித் சர்மா : 3853
3. மார்ட்டின் கப்டில் : 3531

- Advertisement -

2. மேலும் 50 ஓவர், 20 ஓவர், சாம்பியன்ஸ் ட்ராபி என அனைத்து விதமான ஐசிசி தொடர்களையும் சேர்த்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற குமார் சங்ககாராவின் வரலாற்று சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 536* (12 இன்னிங்ஸ்)
2. குமார் சங்கக்காரா : 531 (16 இன்னிங்ஸ்)
3. ரிக்கி பாண்டிங் : 509 (14 இன்னிங்ஸ்)
4. சௌரவ் கங்குலி : 489 (6 இன்னிங்ஸ்)
5. மஹிளா ஜெயவர்த்தனே : 484 (16 இன்னிங்ஸ்)

Virat Kohli

3. அத்துடன் ஐசிசி உலகக் கோப்பை (50 ஓவர் + 20 ஓவர் உலககோப்பை மட்டும்) வரலாற்றில் நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 350*
2. சச்சின் டெண்டுல்கர் : 339
3. ரோஹித் சர்மா : 333
4. எம்எஸ் தோனி : 305

- Advertisement -

4. அது போக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற ஆரோன் பின்ச் சாதனை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 9* (16 இன்னிங்ஸ்)
2. ஆரோன் பின்ச் : 8 (43 இன்னிங்ஸ்)

5. அதை விட இப்போட்டி நடைபெற்ற அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற பிரைன் லாரா சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 957* (11 இன்னிங்ஸ்)
2. பிரையன் லாரா : 940 (15 இன்னிங்ஸ்)

6. அத்துடன் இப்போட்டியில் 4 பவுண்டர்களை அடித்த அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 100 பவுண்டரிகளை அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

Advertisement