- Advertisement -
ஐ.பி.எல்

எங்களை ஒன்னா பாக்குறது கடைசியாக இருக்கலாம்.. தோனி நின்னா போதும்.. அதை செஞ்சுடுவாரு.. விராட் நெகிழ்ச்சி

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் அப்போட்டியில் வெல்லும் அணி கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத்தை தொடர்ந்து 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். எனவே அந்த வாய்ப்பை ஆர்சிபி பிடிக்குமா அல்லது சென்னை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதற்கிடையே சிஎஸ்கே அணியின் நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்.எஸ். தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. 42 வயதை தொட்டுள்ள அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். அத்துடன் முழங்கால் வலியால் அவதிப்படுவதால் இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

விராட் கோலி நெகிழ்ச்சி:
இந்நிலையில் தன்னுடைய முன்னாள் இந்திய கேப்டனான எம்எஸ் தோனியும் தாமும் ஐபிஎல் தொடரில் எதிரெதிர் அணிகளில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். எனவே ஒன்றாக விளையாடிய பழைய நினைவுகளை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விராட் கோலி போட்டியில் கடைசி வரை நின்றால் தோனி வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வார் என்று பாராட்டியுள்ளார்.

அதையே தாமும் உத்வேகமாக எடுத்துக் கொண்டு விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் எந்த மைதானத்திலும் தோனி விளையாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு பெரிய விஷயமாகும். நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியாது”

- Advertisement -

“எனவே இது ஸ்பெஷலான விஷயமாகும். நாங்கள் மகத்தான நினைவுகளை கொண்டுள்ளோம். இந்தியாவுக்காக சில அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். எனவே இப்போட்டியில் எங்களை ஒன்றாக பார்ப்பது ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். மஹி பாய் பற்றியும் “அவர் ஏன் போட்டியை 20 அல்லது 50 ஓவர் வரை எடுத்துச் செல்கிறார்?” என்று மக்கள் விமர்சித்துள்ளனர்”

இதையும் படிங்க: ரோஹித் சொல்றது உண்மை.. எல்லாரும் பும்ரா கிடையாது.. ஜெய் ஷா இதை மாத்தணும்.. விராட் கோலி கோரிக்கை

“ஆனால் அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் என்ன செய்கிறோம் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும். அங்கிருந்து அவர் பலமுறை வெற்றிகரமாக போட்டியை ஃபினிஷிங் செய்துள்ளார். எனக்கு அது மறக்க முடியாத நினைவாகும். கடைசி வரை நின்றால் நம்மால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியும் என்பது தோனிக்கு தெரியும்” என்று கூறினார்.

- Advertisement -