ஃபேப் 4 பிளேயர்களில் விராட் கோலிக்கே இடமில்லை, இதுல பாபர் அசாம் வேறயா? முன்னாள் இந்திய வீரர் அதிரடி பேட்டி

Virat Kohli Babar Azam
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் வந்தாலும் நூற்றாண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை வைத்தே ஒரு வீரரின் உண்மையான தரத்தையும் திறமையும் ஜாம்பவான்களும் வல்லுனர்களும் மதிப்பிடுவார்கள். அந்த வகையில் கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகிய 4 கிரிக்கெட் வீரர்கள் தங்களது நாட்டுக்காக மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி பெரிய ரன்களை குவித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதன் காரணமாக அவர்களை ரசிகர்களும் வல்லுனர்களும் ஃபேப் 4 அதாவது மகத்தான 4 வீரர்கள் என்று அழைப்பது வழக்கமாகும். மேலும் இந்த நால்வரில் யார் முதலாவதாக 10000 ரன்கள் அடித்து அசத்தப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கடந்து சில வருடங்களாகவே அனைவரிடமும் இருந்தது. அதில் 2021 ஜனவரியில் இருந்து அற்புதமாக செயல்பட்ட ஜோ ரூட் 7823 ரன்களிலிருந்து தற்போது 11,000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை தொடும் அளவுக்கு வேகமாக அசத்தி வருகிறார்.

வெளியேறிய விராட் கோலி:
அவருக்கு நிகராக 7237 ரன்களில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் தற்போது 9000 ரன்களை கடந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் உட்பட ஆஸ்திரேலியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அதே போல கேன் வில்லியம்சன் 6877 ரன்களில் இருந்து தற்போது 8124 ரன்களை தொட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் 2021 ஜனவரி வாக்கில் 7202 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி அதன் பின் வெறும் 1277 ரன்களை 29.69 என்ற மோசமான சராசரியில் எடுத்து தற்போது மொத்தமாக 8479 ரன்களுடன் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார்.

Babar

அந்த காலகட்டத்தில் 2021 மற்றும் 2023 ஆகிய அடுத்தடுத்த 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்களில் அவருடைய சுமாரான ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. மறுபுறம் அதே காலகட்டத்தில் 1989 ரன்களை 55.25 என்ற சராசரியில் எடுத்துள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மொத்தமாக 3696 ரன்களை எடுத்துள்ளார். அதன் காரணமாக அந்த மகத்தான 4 வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் இணைந்து விட்டதாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீப வருடங்களாக விராட் கோலி சுமாராக செயல்பட்டு வருவதால் ஃபேப் 4 வீரர்களின் பட்டியலை தற்போது ஃபேப் 3 வீரர்கள் என்று அழைப்பதே சரியாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி, டேவிட் வார்னர் போன்றவர்களுக்கு அந்த பட்டியலில் இடமில்லாத நிலையில் பாபர் அசாம் இப்போதைக்கு அந்த மகத்தான பட்டியலில் இடம் பிடிக்க தகுதியற்றவர் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

chopra

“அந்த பட்டியலில் கேன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் இருப்பார்கள் என்பதில் எந்த கேள்வியும் இல்லை. ஸ்டீவ் ஸ்மித்தும் 6 சதங்களுடன் 50க்கும் மேற்பட்ட சராசரியில் அசத்தி வருவதால் அந்த பட்டியலில் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த சமயத்தில் அந்த பட்டியலில் இடம் பிடிக்க மாட்டார்கள். எனவே தற்போது ஃபேப் 3 வீரர்கள் தான் இருக்கின்றனர். ஃபேப் வீரர்கள் இல்லை. இந்த பட்டியலில் நீங்கள் பாபர் அசாமை சேர்க்க முயற்சிக்கலாம்”

இதையும் படிங்க:ரொம்ப தேங்க்ஸ் தாதா, பிறந்தநாளில் பிழை செய்த சௌரவ் கங்குலி – அன்பான நன்றி சொன்ன இர்பான் பதான், காரணம் இதோ

“அவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடித்துள்ளார் என்பதை சந்தேகமில்லை. ஆனால் முழுவதுமாக டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி பார்க்கும் போது அவர் அந்த பட்டியலில் இடம் பிடிப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. எனவே அந்த பட்டியலில் ரூட், வில்லியம்சன், ஸ்மித் ஆகியோர் இருப்பார்கள். ஆனால் விராட் கோலி மற்றும் வார்னர் ஆகியோர் வெளியே வந்து விட்டனர். அதில் கேரியரின் முடிவில் இருக்கும் வார்னர் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் விராட் கோலி கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement