ரொம்ப தேங்க்ஸ் தாதா, பிறந்தநாளில் பிழை செய்த சௌரவ் கங்குலி – அன்பான நன்றி சொன்ன இர்பான் பதான், காரணம் இதோ

Irfan Pathan
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி ஜூலை 8ஆம் தேதி தன்னுடைய 51வது பிறந்தநாளை கொண்டாடினார். கொல்கத்தாவின் அரச குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் போட்டிகளில் விளையாடி 1996ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கிய அவர் தம்முடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார். அப்போதிலிருந்து நிலையான இடம் பிடித்து சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து சேர்ந்து எதிரணிகளைப் பந்தாடிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக உலக சாதனை படைத்த இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

அதை விட சூதாட்ட புகாரில் சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்று சேவாக், கம்பீர் ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், தோனி போன்ற தரமான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்த்த அவர் குறுகிய காலத்திலேயே இந்தியாவை வெற்றி பாதையில் நடக்க வைத்தார். குறிப்பாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்காக அஞ்சாமல் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையை கழற்றி சுழற்றி பதிலடி கொடுத்த அவரது தலைமையில் 2001 கொல்கத்தா டெஸ்ட் போல தோல்வியின் பிடியில் சிக்கினாலும் மனம் தளராமல் போராடி வெளிநாடுகளில் வெற்றி காணும் கலையை இந்தியா கற்றுக் கொண்டது என்றே சொல்லலாம்.

- Advertisement -

இர்பான் பதான் நன்றி:
மேலும் 2002 சாம்பியன்ஸ் ட்ராபி, நாட்வெஸ்ட் முத்தரப்பு தொடர்களில் வெற்றி பெற்று கொடுத்த அவர் 2003 உலகக்கோப்பை ஃபைனல் வரை இந்தியாவை அழைத்துச் சென்று பின்னர் கிரேக் சேப்பல் உடனான மோதலில் பதவி விலகினார். அதை தொடர்ந்து 2008இல் கம்பேக் கொடுத்து ஓய்வு பெற்ற அவர் 2019 – 2022 வரை பிசிசிஐ தலைவராக செயல்பட்டு தற்போது மீண்டும் வர்னணையாளர் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து 2007 டி20 மற்றும் 2011 உலக கோப்பையை தோனி வென்றார் என்றே சொல்லலாம். அப்படி இந்திய கிரிக்கெட்டை சிறப்பாக கட்டமைத்த அவருக்கு சச்சின் போன்ற ஏராளமான முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். சொல்லப்போனால் கடந்த 50 வருடங்களில் கிரிக்கெட்டில் விளையாட துவங்கி கேப்டனாக இந்தியாவை வழி நடத்தி தற்போது வர்ணணையாளராக செயல்படும் தமக்கு ஆதரவு மற்றும் அன்பு கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சில புகைப்படங்களை பிரபல ஹிந்தி பாடலின் பின்னணி இசையில் வீடியோவாக உருவாக்கிய கங்குலி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

குறிப்பாக தம்முடைய கேரியரில் இருந்த மேடு பள்ளங்கள் மற்றும் மகிழ்ச்சியான மறக்க முடியாத தருணங்களின் புகைப்படங்களை இணைத்து அவர் வீடியோவாக வெளியிட்டது ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வாழ்த்துக்களை தெரிவிக்க வைத்தது. ஆனால் அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்த முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் அதில் இருக்கும் புகைப்படங்களில் ஒன்று தம்முடையதாக இருந்ததை நினைத்து வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக தம்மை போலவே இர்பான் பதானும் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் அதை சரியாக கவனிக்காத கங்குலி தம்முடைய புகைப்படம் என்று நினைத்து அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார். இருப்பினும் அந்தத் தவறை சுட்டிக்காட்டியுள்ள இர்ஃபான் பதான் பிழையாக இருந்தாலும் உங்களுடைய புகைப்படங்களுக்கு மத்தியில் எனக்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க:பேட்ஸ்மேனுக்கும், பவுலருக்கும் இனிமே சரியான போட்டி இருக்கனும். புதிய விதிமுறையை கொண்டுவந்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

“தாதா பேட்டிங் செய்யும் போது நாம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்போம் என்றும் அது உங்களை குழப்பமடைய செய்யும் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் இதற்காக நன்றி. இதை நான் பெரிய அங்கீகாரமாக எடுத்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். முன்னதாக 2003ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இர்ஃபான் பதான் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை சௌரவ் கங்குலி தான் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement