பேட்ஸ்மேனுக்கும், பவுலருக்கும் இனிமே சரியான போட்டி இருக்கனும். புதிய விதிமுறையை கொண்டுவந்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

BCCI
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டி20 வடிவம் வந்ததிலிருந்தே பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என இருவருக்குமே சமமான போட்டி நிலவி வரும் வேளையில் டி20 போட்டிகளில் 120 பந்துகள் மட்டுமே இருப்பதால் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கி முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாகவே மாற்றி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் மைதானத்திற்கு வரும் ரசிகர்களும் சில மணி நேரங்கள் மட்டுமே நடைபெறும் இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களின் வான வேடிக்கையை காணவே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலுமே வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் அந்த போட்டி ஒரு முழுமையான போட்டியாக இருக்கும்.

அந்த வகையில் இனி டி20 உள்ளூர் கிரிக்கெட்டில் போட்டியின் சமநிலையை சரிசெய்ய இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ இன்று ஒரு புதிய விதிமுறையை எதிர்வரும் சையத் முஷ்தாக் அலி தொடருக்காக அறிவித்துள்ளது. அதன்படி நடப்பு ஆண்டு முதல் சையத் முஷ்தாக் அலி டி20 தொடரில் பவுலர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு ஷாட் பிட்ச் பந்துகளை வீசலாம் என்ற புதிய விதிமுறை அறிவித்துள்ளது.

Siraj

வழக்கமாக பவுலர்கள் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து மட்டுமே வீச வேண்டும் என்ற விதிமுறை இருந்து வரும் வேளையில் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் இந்த சையத் முஷ்தாக் அலி தொடரில் இருந்து பவுலர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்று பி.சி.சி.ஐ புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு இடையேயான போட்டி சரிசமமாக இருக்கும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய அணி அனுப்பவும் இந்தியா முழுவதும் இருக்கும் மைதானங்களை புனரமைப்பது குறித்தும் பல்வேறு விடயங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதையும் படிங்க : முதலில் பணத்த செட்டில் பண்ணுங்க, ஆஸி வீரருக்கு இங்கிலாந்து சலூன் கடைக்காரர் கெடு – நடந்தது என்ன?

அது தவிர்த்து உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கும் மைதானங்களின் தரத்தை உயர்த்தவும், உலகக்கோப்பை தொடர் முடிந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மைதானங்களையும்ம் நவீனப்படுத்துவோம் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement