முதலில் பணத்த செட்டில் பண்ணுங்க, ஆஸி வீரருக்கு இங்கிலாந்து சலூன் கடைக்காரர் கெடு – நடந்தது என்ன?

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே வலுவான முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதே நிரூபித்தது. மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்விகளை சந்தித்தது. அந்த நிலையில் ஜூன் 7ஆம் தேதி ஹெண்டிங்லே நகரில் துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் சதமடித்து 118 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 237 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் போராடி 80 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 26 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 116/4 ரன்களை எடுத்துள்ளது.

- Advertisement -

சலூன் கடைக்காரர் புகார்:
உஸ்மான் கவாஜா 43, மார்னஸ் லபுஸ்ஷேன் 33 ரன்கள் எடுத்த உதவியுடன் 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியாவுக்கு களத்தில் மார்ஷ் 17* டிராவிஸ் ஹெட் 18* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி லீட்ஸ் நகரில் இருக்கும் ஒரு முடி திருத்தும் கடைக்கு உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் போன்ற சக வீரர்களுடன் சென்று தம்முடைய முடியை வெட்டியுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் கடை மூடும் சமயத்தில் சென்ற அவர் முடிகளை திருத்தம் செய்த பின் பணத்திற்கு பதிலாக கார்ட் வாயிலாக கட்டணத்தை செலுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் அந்த கடையில் கார்ட் வாயிலாக பரிவர்த்தனை செய்யப்படாது என்று தெரிந்து கொண்ட அவர் பின்னர் தருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியதாக இங்கிலாந்தின் பிரபல சன் பத்திரிகையில் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுவரை அந்த 30 யூரோ பணத்தை அலெக்ஸ் கேரி கொடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ள சலூன் கடை உரிமையாளர் ஆடம் மக்மூத் அதை வரும் திங்கள்கிழமைக்குள் மறக்காமல் கொடுக்குமாறு கெடு விதித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சன் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தி பின்வருமாறு. “நான் இன்னும் காத்திருக்கிறேன். அவர்கள் கடை மூடுவதற்கு சற்று முன்பாக வந்தனர். அப்போது அவர்களின் முடியை திருத்திய நான் நல்ல மகிழ்ச்சியான அனுபவத்தை சந்தித்தேன். ஆனால் இறுதியாக கார்ட் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவித்த என்னிடம் அலெக்ஸ் பணம் இல்லை என்று சொன்னார். அப்போது அருகில் இருந்த டெஸ்கோ பண இயந்திரத்தின் வாயிலாக அவர் பணத்தை எடுத்துக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன்”

“இருப்பினும் வங்கியின் வாயிலாக பணம் அனுப்புவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிய அவர் அதை மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். அதனால் அந்த சந்தேகத்தின் பலனை நான் அவருக்கு கொடுக்கிறேன். இருப்பினும் அவர் திங்கள்கிழமைக்குள் எனக்கு பணம் கொடுக்க விட்டால் நான் மகிழ்ச்சியாக இருக்க மாட்டேன்” என்று கூறினார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அதை பற்றி இந்த போட்டியில் வர்னணையாளராக செயல்படும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் கலாய்க்கும் வகையில் பேசினார்.

- Advertisement -

இந்நிலையில் 2வது போட்டியை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து திரும்பிய அலெக்ஸ் கேரி முடி திருத்துவதற்காக எங்கேயும் செல்லவில்லை என்பதை தாம் உறுதி செய்வதாக த்ரட்ஸ் சமூக வலைதளத்தில் கூறியுள்ள ஸ்டீவ் ஸ்மித் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என்று சன் பத்திரிகையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க:வீடியோ : ஊரே அமர்களமா ஆரவராமா பிறந்தநாளை கொண்டாடிய வேளையில். நம்ம தல தோனி எப்படி கொண்டாடி இருக்காரு பாருங்க

முன்னதாக ஜானி பேர்ஸ்டோவை சர்ச்சைக்குரிய முறையில் அலெக்ஸ் கேரி அவுட்டாக்கியதை விமர்சித்த பென் ஸ்டோக்ஸை ஆஸ்திரேலிய ஊடகங்கள் குழந்தையைப் போல் சித்தரித்து கலாய்த்தனர். ஒருவேளை அதற்கு பதிலடி கொடுப்பதற்காக இங்கிலாந்து பத்திரிகைகள் இப்படி ஒரு வேலையை துவங்கியுள்ளதா என்ற குழப்பமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement