ஊரே அமர்களமா ஆரவராமா பிறந்தநாளை கொண்டாடிய வேளையில். நம்ம தல தோனி எப்படி கொண்டாடி இருக்காரு

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் பெற்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையை உடையவர். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மகேந்திர சிங் தோனி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தனது ஓய்வு முடிவை அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக அண்மையில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் கேப்டனாக சென்னை அணியை வழிநடத்திய தோனி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சமன் செய்தார். அதனை தொடர்ந்து தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்ட தோனி தற்போது ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று ஜூலை 7-ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடிய தோனி ஆரவாரம் இல்லாமல் அமைதியாக கொண்டாடி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். என்னதான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் தோனியை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நேற்று தோனியின் பிறந்தநாள் அன்று இந்தியா முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் கட்டவுட் வைத்தும், பேனர்கள் வைத்தும், டிரம்ஸ் வாசித்தும் தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதோடு பல்வேறு நகரங்களில் இனிப்பு வழங்குவது, உணவு வழங்குவது என அமர்க்களமாகவும், ஆரவாரமாகவும் தோனியின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

- Advertisement -

ஆனால் தற்போது தோனி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் : தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி அவர் எவ்வாறு இந்த பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனது பண்ணை வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுடன் கேக் வெட்டிய தோனி செல்லப் பிராணிகளுக்கு கேக் வீசியதோடு, தானும் சாப்பிட்டு பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் விளையாடப்போகும் வீரர்கள் யார்? யார்? – பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச்

அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஊரே அமர்க்களமாக தனது பிறந்தநாளை கொண்டாடினாலும் தோனி இப்படி செல்ல பிராணிகளுடன் எளிமையாக கொண்டாடியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement