ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் விளையாடப்போகும் வீரர்கள் யார்? யார்? – பி.சி.சி.ஐ போட்டுள்ள ஸ்கெட்ச்

Samson-and-BCCI
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்த கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள மிகப்பெரிய தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கு அடுத்து அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அடுத்த மாதம் இந்தியா பங்கேற்க இருக்கிறது. அந்த அயர்லாந்து தொடருக்கு அடுத்து சீனாவில் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

Shardhul Thakur India Dhawan Shreyas Iyer

- Advertisement -

இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ள வேளையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டிருந்தாலும் இந்திய அணி பங்கேற்கவில்லை.

ஆனால் தற்போது மீண்டும் ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதை அடுத்து இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து தொடர்கள் வரிசைகட்டி இருக்கும் வேளையில் இந்திய அணி அக்டோபர் 5-ஆம் தேதி துவங்க உள்ள ஐசிசி உலக கோப்பைக்காக தயாராக வேண்டியுள்ளது.

Dhawan-1

எனவே இந்த இடைப்பட்ட வேளையில் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணி குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக வீரர்கள் தயாராகும் விதமாக முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், கே.எல் ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷிகார் தவான் தலைமையிலான இரண்டாம் தர இந்திய அணியே ஆசிய போட்டிகளில் பங்கேற்று விளையாடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 2023 உ.கோ செமி ஃபைனலில் விளையாடும் 4 அணிகள் எவை? இந்தியா வருமா – சௌரவ் கங்குலியின் கணிப்பு இதோ

மேலும் இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான அணியில் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட இளவீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement