நீங்க ரோஹித் இல்ல.. அதெல்லாம் உங்களுக்கு செட்டாகாது.. விராட் கோலிக்கு ஸ்ரீகாந்த் முக்கிய கோரிக்கை

Srikkanth
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது. அதிலும் பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானை இரட்டை சூப்பர் ஓவரில் இந்தியா போராடி தோற்கடித்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. முன்னதாக அத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடினர்.

அதில் கேப்டனாக களமிறங்கிய ரோகித் சர்மா முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட்டானாலும் கடைசி போட்டியில் 2 சூப்பர் ஓவரிலும் சேர்த்து 129*, 13*, 11* ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்து தன்னுடைய தரத்தை மீண்டும் நிரூபித்தார். ஆனால் 2வது போட்டியில் சரவெடியாக விளையாட முயற்சித்து 29 ரன்களில் அவுட்டான விராட் கோலி 3வது போட்டியிலும் முதல் முறையாக கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இது செட்டாகாது:
அதை விட பொதுவாகவே நிதானமாக துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யக்கூடிய அவர் இத்தொடரில் திடீரென முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்க நினைத்தது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது. இந்நிலையில் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்குவது ரோகித் சர்மா, ஜெயிஸ்வால் போன்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

எனவே அந்த அணுகுமுறை உங்களுக்கு செட்டாகாது என்று தெரிவிக்கும் ஸ்ரீகாந்த் ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் விளையாடும் உங்களுடைய இயற்கையான ஸ்டைலை பின்பற்றுமாறு விராட் கோலிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றிய தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு வீரருக்கும் சொந்த ஆட்டம் இருக்கிறது. அதையே ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்”

- Advertisement -

“எடுத்துக்காட்டாக நேரம் எடுத்து பொறுமையாக விளையாடுங்கள் என்று ஜெய்ஸ்வாலிடம் சொல்வது சரியாக இருக்காது. அவர் மற்றும் என்னைப் போன்ற வீரர்காளிடம் நேரத்தை எடுத்து விளையாடுங்கள் என்று சொல்ல முடியாது. ரோகித் சர்மாவிடம் அவ்வாறு விளையாடும் திறமை இருக்கிறது. ஆனால் விராட் கோலி தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும். எப்போதுமே அவர் நேரம் எடுத்து விளையாட விரும்புவார். சிக்ஸர் அடிப்பதை பற்றி கவலைப்படாத அவரிடம் கடைசியில் அதிரடி காட்டி சிக்ஸர்களை விளாசும் திறமை இருக்கிறது”

இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் அந்த சி.எஸ்.கே வீரருக்கு சேன்ஸ்ஸே கெடைக்காது – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

“மெல்போர்னில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதை நாம் பார்த்தோம். அதில் அவர் போட்டியை கட்டமைத்து வென்று கொடுத்தார். எனவே முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்கு நினைத்தால் ஓரிரு முறை சாதிக்கலாம் ஆனால் எப்போதும் முடியாது. எனவே விராட் கோலி தன்னுடைய தத்துவங்களை பின்பற்ற வேண்டும். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமாக செயல்படுவதற்கு எந்த ஸ்டைலை பின்பற்றினாரோ அதை அவர் தொடர வேண்டும்” என்று கூறினார்.

Advertisement