ஒன்னு அந்த ஈகோவ விடுங்க இல்ல இதை செய்யுங்க – தடுமாறும் விராட் கோலிக்கு மிஸ்பா உல் ஹக் அறிவுரை

kohli 2
- Advertisement -

பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 1-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக துவங்கிய இந்த தொடரில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் பதம் பார்த்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெற உள்ளது.

INDvsENG 1

- Advertisement -

எனவே இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கப்போகும் இந்த முக்கிய போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் ஜோ ரூட் – விராட் கோலி ஆகியோரது தலைமையில் மோதிய இவ்விரு அணிகளும் இம்முறை மொத்தமாக மாறி பென் ஸ்டோக்ஸ் – ரோகித் சர்மா ஆகியோரின் தலைமையில் மோத உள்ளது. இதில் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா கரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதால் களமிறங்குவாரா என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

சுமாரான பார்மில் விராட்:
இந்த முக்கியமான போட்டியில் அடம்பிடிக்கும் 71-ஆவது சதத்தை அடித்து இந்தியாவின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய பங்காற்றுவாரா என்று மொத்த இந்திய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜாம்பவான் சச்சினுக்கு பின் கடந்த பல வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் முதுகெலும்பு வீரராக வலம் வரும் அவர் ரன் மெஷினாக ஏற்கனவே 70 சதங்களை அடித்து பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

kohli

இருப்பினும் கடந்த 2019க்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கும் மேலாக 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவித்து வரும் அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே சீசனில் 3 முறை கோல்டன் டக் அவுட்டானார். கடந்த பல வருடங்களாக ஓடிஓடி ரன்கள் எடுத்த களைப்பு அவரின் ஆட்டத்திலும் முகத்திலும் தெரிந்ததால் 2 – 3 மாதங்கள் பிரேக் எடுக்குமாறு ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டதை பின்பற்றாத அவர் தொடர்ச்சியாக விளையாடி சதமடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்:
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விதவிதமாக அவுட்டாகும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 3 வருடங்களாக பெரும்பாலும் அடிக்காமல் விடவேண்டிய அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தமக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் அடிக்க வேண்டும் என்பதற்காக வழியச்சென்று அடித்து அவுட்டாவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அதனால் கடந்த 2003இல் இதேபோல் தடுமாறியபோது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் கவர் டிரைவ் அடிக்காமல் மன உறுதியுடன் பேட்டிங் செய்து 241 ரன்கள் விளாசிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்பற்றி 71-வது சதத்தை அடிக்கும் வரை கவர் டிரைவ் அடிக்காமல் இருங்கள் என்று விராட் கோலிக்கு பலரும் ஆலோசனை தெரிவித்து விட்டார்கள்.

ஆனால் அதை காதில் வாங்காத அவர் தொடர்ந்து செய்த தவறுகளையே செய்து வருகிறார். இந்நிலையில் ஒன்று எதிரணி பந்துவீச்சாளர்களிடம் அடி பணியாமல் கவர் ட்ரைவ் அடிக்க வேண்டும் என்ற ஈகோவை கைவிடுங்கள் அல்லது பழைய ஃபார்முலாவான உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று பார்முக்கு திரும்புங்கள் என்று தடுமாறும் விராட் கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு திரும்பி பெரிய ரன்களை எடுக்க வேண்டும். அங்கு பந்துவீச்சு உலகத்தரம் வாய்ந்ததாக இருக்காது. ஆனாலும் அது அவர் பழைய ஃபார்முக்கு திரும்ப உதவும். அதனால் உங்களின் உங்களின் மனம் பெரிய ரன்களை எடுப்பதற்கு உத்வேகத்தைக் கொடுக்கும். ஒருமுறை அந்தப் பழைய தன்னம்பிக்கை வந்துவிட்டால் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் எந்த எதிரணியாக இருந்தாலும் அவரால் ரன்களை அடிக்க முடியும்”

Misbah-ul-Haq

“விராட் கோலி எப்போதும் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை துரத்தி சென்று நிறைய முறை அவுட்டாகியுள்ளார். இது நுணுக்கங்கள் அடிப்படையிலான தவறு கிடையாது. மனரீதியான பிரச்சனையாகும். பந்து வீச்சாளர்களை அடித்து பெருமையடைய வேண்டும் என்ற ஈகோ அவரிடம் இருப்பதால் அவர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார்.

இதையும் படிங்க : IND vs ENG : எப்போப்பாரு சதத்தையே பேசுறீங்க, அதற்கு அவசியமில்லை, விராட் கோலி இதை செய்தாலே போதும் – கோச் டிராவிட் ஆதரவு

ஆனால் சில தருணங்களில் அதையே ஓவராக செய்து விடுகிறார். மேலும் மேலும் அழுத்தத்துடன் விளையாடும் அவருக்கு மேலும் மேலும் அழுத்தம் தான் அதிகரித்து வருகிறது” என்று கூறினார்.

Advertisement