IND vs ENG : எப்போப்பாரு சதத்தையே பேசுறீங்க, அதற்கு அவசியமில்லை, விராட் கோலி இதை செய்தாலே போதும் – கோச் டிராவிட் ஆதரவு

Dravid
- Advertisement -

ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சந்திக்கிறது. கடந்த வருடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது பாதியில் நிறுத்தப்பட்ட அத்தொடரின் கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. ஆனால் இம்முறை பென் ஸ்டோக்ஸ் – ரோகித் சர்மா என இரு அணிகளின் கேப்டன்களும் மாறியுள்ளதால் இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

INDvsENG

இருப்பினும் கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் தடுமாறிய இங்கிலாந்து இம்முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக வெற்றியை பெறும் வலுவான அணியாக மாறியுள்ளது. அதனால் இப்போட்டியில் வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்வோம் என ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அதை சமாளிப்பதற்கு இந்தியா சார்பில் கரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டுள்ள புதிய கேப்டன் ரோகித் சர்மா களமிறங்குவாரா என்ற கேள்வி நிலவி வருகிறது. இல்லையென்றாலும் ஏற்கனவே விராட் கோலி முன்னிலை பெற்று கொடுத்த இந்த தொடரை வெற்றிகரமாக பினிஷிங் செய்து 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் கோப்பையை வெல்ல எஞ்சிய இந்திய அணியினர் போராட உள்ளனர்.

- Advertisement -

சதமடிப்பாரா விராட்:
இந்த முக்கியமான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடிப்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் ஏற்கனவே 70 சதைகளை அடித்து சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பின் சாதனை படைத்துள்ள அவர் கடந்த 2019க்குப் பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கு மேலாக சதமடிக்க முடியாமல் திணறி வருகிறார். அதிலும் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் 3 முறை கோல்டன் டக் அவுட்டான அவரை ஒருசில மாதங்கள் ஓய்வு எடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

kohli

ஆனாலும் தொடர்ச்சியாக விளையாடிய அவர் எந்த மாற்றமும் முன்னேற்றமும் அடையவில்லை. அதன்பின் சமீபத்திய தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்த அவர் சற்று குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு இந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளதால் அடம்பிடிக்கும் 71-ஆவது சதத்தை அடிப்பாரா என்று வழக்கம்போல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த கடினமான காலகட்டங்களிலும் இடையிடையே 50, 70 ரன்களை எடுத்தாலும் களமிறங்கினாலே சதம் அடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு கடந்த காலங்களில் அபாரமாக செயல்பட்ட அவர் தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

- Advertisement -

சதம் முக்கியமல்ல:
அதனாலேயே இடையிடையே அவர் அடிக்கும் அரை சதங்களை கண்டுக்காத அனைவரும் பார்மின்று தவிக்கிறார் என்றே பேசுகின்றனர். இப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கூட அவர் 33, 67 என கணிசமான நல்ல ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில் நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் சதத்தை அடிக்கவில்லை என்றாலும் போட்டியை வெல்லும் அளவுக்கு 50 – 60 ரன்களை விராட் கோலி எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினால் அதுவே எங்களுக்கு போதுமானது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Dravid

இந்த கடினமான தருணத்தில் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் இப்போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் 3 இலக்க ரன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன் நகரில் நடந்த போட்டியில் கடினமான தருணத்தில் எடுக்கும் 70 போன்ற ரன்கள் மிகவும் முக்கியமானது. அதை 3 இலக்க ரன்களாக மாற்றவில்லை என்றாலும் நல்ல ஸ்கோர் தான். சதமடிப்பதையே அவரின் வெற்றியாக அனைவரும் பார்க்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் ஒரு பயிற்சியாளராக 50 – 60 ரன்கள் போன்ற போட்டிக்கு வெற்றியைத் தரக்கூடிய ரன்களையே நான் எதிர்பார்க்கிறேன். அனைத்து வீரர்களும் இது போன்ற கடினமான தருணங்களை கடந்து செல்வார்கள்”. “விராட் விசயத்தில் உத்வேகம் அல்லது தன்னம்பிக்கை எதுவும் குறையவில்லை என்று நினைக்கிறேன். என்னைப் பொருத்தவரை 30 வயதை கடந்துள்ள அவர் கடுமையாக உழைக்கக் கூடிய நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவரின் விருப்பம் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்ற பசியை நான் பார்த்து வருகிறேன்.

இதையும் படிங்க : IND vs ENG : இந்தியாவுக்கு தேசத்தை விட ஐபிஎல் முக்கியம்னு நிரூபிச்சாங்க – இங்கிலாந்து முன்னாள் வீரர் தரமான விமர்சனம்

லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கடினமான தருணங்களில் பும்ரா போன்ற நல்ல பவுலர்களுக்கு எதிராகவே அவர் 50 – 60 ரன்களை எடுத்தார். எனவே இந்த மோசமான தருணத்திலிருந்து வெளிவர அவர் அனைத்து வேலைகளும் செய்துள்ளார்” என்று பாராட்டினார்.

Advertisement