IND vs ENG : இந்தியாவுக்கு தேசத்தை விட ஐபிஎல் முக்கியம்னு நிரூபிச்சாங்க – இங்கிலாந்து முன்னாள் வீரர் தரமான விமர்சனம்

ipl
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1-ஆம் தேதியன்று தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்டு 5-வது போட்டி பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. கடந்த வருடம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த விராட் கோலி தலைமையிலான இந்தியா அப்போதிருந்த ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் மான்செஸ்டர் நகரில் நடைபெறுவதாக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக அத்தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

எனவே தற்போது நடைபெறப்போகும் அந்த தொடரின் கடைசி போட்டியில் வெல்லப்போவது யார் என்ற மாபெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த முறை விராட் கோலி – ஜோ ரூட் தலைமையில் மோதிய இவ்விரு அணிகளும் தற்போது ரோகித் சர்மா – பென் ஸ்டோக்ஸ் ஆகிய புதிய கேப்டன்கள் தலைமையில் மோத உள்ளது. இதில் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் வந்தபின் அதிரடியான வெற்றிகளை குவிக்கும் வலுவான அணியாக இங்கிலாந்து மாறியுள்ளதால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது கடும் சவாலாகவும் போட்டியாகவும் மாறியுள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடருக்காக:
மறுபுறம் இந்திய தரப்பில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இந்த போட்டியில் தான் இந்தியாவை வழி நடத்த உள்ளார். ஆனால் அவர் கரோனா ஏற்பட்டு தனிமைப்படுத்தி கொண்டுள்ளதால் இப்போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வி நிலவி வருகிறது. முன்னதாக கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் இந்த தொடரில் களமிறங்கிய இந்தியா அபாரமாக செயல்பட்டு 4 போட்டிகளின் முடிவில் முன்னிலை பெற்று இங்கிலாந்து மண்ணில் 15 வருடங்களுக்கு பின் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை நெருங்கியது.

இருப்பினும் 4-வது போட்டி முடிந்ததும் இந்திய அணியில் ஏற்ட்ட கரோனா பரவலால் 5-வது போட்டியில் களமிறங்க முடியாது என்று தெரிவித்த இந்திய அணி நிர்வாகம் அப்போட்டியை ரத்து செய்துவிட்டு தாயகமும் திரும்பாமல் நேரடியாக துபாயில் தொடங்க இருந்த ஐபிஎல் தொடரின் 2-வது பகுதியில் விளையாட இந்திய வீரர்களை அனுமதித்தது சர்ச்சையாக மாறியது.

- Advertisement -

ஏனெனில் அந்த சமயத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி 6 நாட்கள் அனைத்து வீரர்களும் துபாய்க்குச் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் 5-வது போட்டியை போட்டி நாளன்று காலையில் ரத்து செய்தபின் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று துபாய் பறந்த இந்திய வீரர்கள் செப்டம்பர் 19இல் ஐபிஎல் துவங்க 7 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் முழுமையாக தனிமைப் படுத்திக் கொள்ளாமல் அவசர அவசரமாக ஐபிஎல் தொடரில் களமிறங்கினார்கள்.

ஐபிஎல் முக்கியம்:
அதை அப்போதே தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டிய இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அந்த டெஸ்ட் போட்டி ஐபிஎல் தொடருக்காக ரத்து செய்யப்பட்டதே தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல என்று ஆதாரத்துடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தற்போது இங்கிலாந்து வந்துள்ள இந்திய அணியினரை மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் பால் நியூமென் கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது தேசத்துக்காக விளையாடும் டெஸ்ட் போட்டிகளை விட ஐபிஎல் தான் முக்கியம் என்று கடந்த வருடம் இந்தியா நிரூபித்ததாக தெரிவிக்கும் அவர் அப்போட்டிக்காக காத்திருந்த பொதுமக்களையும் ரசிகர்களையும் அவர்கள் அவமானப்படுத்தியதாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல டெய்லி மெயில் பத்திரிகையில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “டெஸ்ட் தொடரை முடிப்பதற்காக தற்போது இந்தியா வந்துள்ள இந்த போட்டி கடந்த வருடமே மான்செஸ்டரில் முடிந்திருக்க வேண்டும். கடைசி போட்டியின் காலையில் போட்டி ரத்து செய்யப்பட்ட அந்த தருணம் அவர்கள் பொதுமக்களையும் டெஸ்ட் கிரிக்கெட்டையும் எந்தளவுக்கு தலைகுனிய வைத்தார்கள் என்பதை நினைவு படுத்துகிறது”

“கரோனா காரணமாக அப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது சிரிப்பாக இருந்தது. ஏனெனில் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்பாக ஐபிஎல் தொடரை முன்னிறுத்தினர். அது கிரிக்கெட் விளையாட்டுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்தது” என்று தரமான நியாயமான விமர்சனத்தை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG 5வது டெஸ்ட் : 15 வருட கனவை நிஜமாக்குமா இந்தியா – முன்னோட்டம், வரலாற்று புள்ளிவிவரம் இதோ

ஏனெனில் இந்தியா பங்கேற்கும் சர்வதேச போட்டிகள் பாதிக்கப்பட்டாலும் சமீப காலங்களில் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ செயல்பட்டு வருவதை பல தருணங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. அது தேசத்தை விட ஐபிஎல் முக்கியம் என்ற எண்ணத்தில் பிசிசிஐ செயல்படுவதை தெளிவாக காட்டுகிறது.

Advertisement