ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை யாரும் தொடாத சாதனையை நிகழ்த்தவுள்ள – விராட் கோலி

Kohli-3
- Advertisement -

ஆர்.சி.பி அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி வீரராக விராட்கோலி செயல்பட்டு வருகிறார். அது தவிர கடந்த பல ஆண்டுகளாகவே ஆர்.சி.பி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றில் உலகின் பல்வேறு முன்னணி வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வரும் விராட் கோலி இதுவரை 199 போட்டிகளில் விளையாடி 6076 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி.அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் கோலி ஒரு மிகப்பெரிய இமாலய சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

- Advertisement -

அந்த சாதனையை யாதெனில் கோலி இன்றைய போட்டியில் விளையாட இருப்பது அவரது 200வது ஐபிஎல் போட்டியாகும். பெங்களூர் அணி சார்பாக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை இவரே படைக்க இருக்கிறார். இதுவரை 5 சதங்களுடன் 6076 ரன்கள் குவித்த இவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் திகழ்கிறார்.

ஐபிஎல் போட்டிகளில் 200 போட்டிகளில் விளையாடியுள்ள 5 ஆவது வீரர் இவர்தான். இவருக்கு முன்னதாக தோனி 212 போட்டிகளிலும், ரோகித்சர்மா 207 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 203 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 201 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

Kohli

இந்நிலையில் இன்று கோலி படைக்கவிருக்கும் சாதனை யாதெனில் ஒரே ஒரு ஐபிஎல் அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் ஐபிஎல் வீரர் என்ற சாதனையை கோலி படைக்க உள்ளார். இதுவரை தான் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வரும் கோலி இன்று தனது 200வது போட்டியை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 5 வெற்றிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement