- Advertisement -
ஐ.பி.எல்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் வீரராக விராட் கோலி நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது ஆட்டத்தில் சற்று பொறுமையான இன்னிங்சை விளையாடி இருந்தாலும் 38 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு பிலிப் சால்ட்டுடன் இணைந்து விளையாடிய அவர் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.

மும்பை அணிக்கு எதிராக விராட் கோலி நிகழ்த்திய சாதனை :

ஒருபுறம் பிலிப் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் விராட் கோலி இன்னிங்ஸை நிலையாக கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார். இதன் காரணமாக மிகச் சிறப்பான துவக்கத்தை கண்ட பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 222 ரன்கள் மட்டுமே அடிக்க பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றியும் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் 38 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 50 ரன்கள் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2 போட்டியாவே இப்படித்தான் நடக்குது.. பெங்களூரு அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா பேட்டி

இந்த வரிசையில் அவருக்கு அடுத்து கே.எல் ராகுல் 977 ரன்களுடனும், ஷிகர் தவான் 901 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதுமட்டும் இன்றி டி20 போட்டிகளில் அதிகமுறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த வீரராகவும் விராட் கோலி தற்போது கிரிஸ் கெயில் மற்றும் பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -