மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 20-வது லீக் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து : ஹார்டிக் பாண்டியா பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை குவிக்க அடுத்ததாக 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதேபோன்று பந்துவீச்சிலும் நிறைய ரன்கள் வழங்கி விட்டோம். அதுவே பாதகத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த போட்டியில் பந்துவீசும் போது அதிக ரன்களை வழங்கியதால் எங்களால் பேட்டிங் செய்யும்போது அதை துரத்த முடியவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாகவே நாங்கள் ரன்களை அதிகளவில் வழங்கி விட்டோம். அதனால் சேசிங் செய்து அதனை துரத்தி பிடிக்க சற்று கடினமாக இருக்கிறது இருந்தாலும் இதுபோன்ற தோல்வியிலிருந்து நாங்கள் பல விடயங்களை கற்றுக் கொள்கிறோம்.
இதையும் படிங்க : மும்பை அணிக்கெதிரான போட்டியில் அடைந்த வெற்றிக்கு இதுவே காரணம் – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி
இன்னும் இரண்டு நாட்களில் அடுத்த போட்டி உள்ளது. நிச்சயம் அந்த போட்டியின் போது இந்த குறைகள் எல்லாம் கலைந்து மிகச் சிறப்பாக செயல்படுவோம். அதேபோன்று இனிவரும் போட்டிகளில் பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி சரியான பலத்தை சேர்க்கும் வகையில் சில மாற்றங்களையும் செய்ய இருக்கிறோம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



