மும்பை அணிக்கெதிரான போட்டியில் அடைந்த வெற்றிக்கு இதுவே காரணம் – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மும்பை அணிக்கெதிரான வெற்றிக்கு இதுவே காரணம் : ரஜத் பட்டிதார்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக பிலிப் சால்ட் 78 ரன்களையும், பட்டிதார் 53 ரன்களையும் குவித்தனர். பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :

- Advertisement -

20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஷெர்பேன் ரூதர்போர்டு 71 ரன்களையும், ஹர்டிக் பாண்டியா 40 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக மும்பைக்கு வந்து இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நாங்கள் பெற்ற இந்த வெற்றி வேறுவிதமான ஒரு மகிழ்ச்சியை தருகிறது. இன்றைய போட்டியில் நாங்கள் அனைவருமே பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தோம். குறிப்பாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் அருமையான துவக்கத்தை அளிக்கவே அந்த ஆட்டத்தை அப்படியே கொண்டு சென்று நாங்கள் பெரிய ரன் குவிப்பாக அதனை மாற்றினோம்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் வெற்றியை பெற்ற கையோடு ருதுராஜ் கெய்க்வாடுக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம் – என்ன காரணம்?

இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்படவே நாங்கள் வெற்றியும் பெற்றுள்ளோம். பொதுவாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக நான் நன்றாக விளையாடுவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் வேகப்பந்து வீச்சாளராகளுக்கு எதிராக அதுவும் இந்த மைதானத்தில் என்னால் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்பதை இன்று பார்த்திருக்க முடியும் என ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement