முதல் வெற்றியை பெற்ற கையோடு ருதுராஜ் கெய்க்வாடுக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம் – என்ன காரணம்?

Ruturaj Captain
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறியது. கடந்த ஆண்டு படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியிலிருந்து பல வீரர்கள் மினி ஏலத்திற்கு முன்பு கழட்டி விடப்பட்ட வேளையில் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் பங்கேற்று இருந்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2026 மினி ஏலத்தில் பல்வேறு இளம் வீரர்களை குறி வைத்து வாங்கிய சென்னை அணி தற்போது அனுபவ வீரர்கள் இன்றி முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட ஒரு புதிய அணியாக 2026 ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது.

ருதுராஜ் கெய்க்வாடுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் :

இதன் காரணமாக இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட சி.எஸ்.கே அணி முதல் மூன்று போட்டிகளின் முடிவில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்து மீண்டும் ஒருமுறை படுமோசமான துவக்கத்தை சந்தித்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதலாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இதுவரை நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள வேளையில் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று பலரும் தங்களது நம்பிக்கையை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டி முடிந்த பின்னர் சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாடுக்கு 12 லட்சம் ரூபாய் ஐ.பி.எல் நிர்வாகம் மூலம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : டெல்லி அணிக்கு எதிராக இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தினை எடுத்துக் கொண்டதற்காக அவருக்கு கேப்டன் என்கிற அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்காக எம்.எஸ் தோனியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

ஏற்கனவே இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் இயற் மற்றும் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் இஷான் கிஷன் ஆகியோருக்கு இதே அபராதம் விதிக்கப்பட்டுள்ள வேளையில் தற்போது மூன்றாவது கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாடுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement