இறுதிப்போட்டிக்கு செல்லமுடியாமல் வெளியேறிய பின்னர் ரசிகர்களுக்கு நன்றி கூறி – கோலி வெளியிட்ட பதிவு

Kohli
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 15வது சீசனாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய அணியாக ஆண்டுதோறும் பார்க்கப்பட்டு வரும் பெங்களூரு அணியானது இதுவரை நடைபெற்று முடிந்த 14 சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. ஆனாலும் இந்த 15வது நடப்பு சீசனில் பெங்களூரு அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என பெங்களூரு அணியின் ரசிகர்கள் அவர்களுக்கு பேராதரவை வழங்கினர்.

ஆனாலும் டூபிளெஸ்ஸிஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட பெங்களூரு அணியானது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதே தவிர இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டது. முதலாவதாக எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்திய பெங்களூரு அணி தங்களது 2-வது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது.

- Advertisement -

ஆனால் அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லரின் அதிரடி காரணமாக தோல்வியை சந்தித்த பெங்களூர் அணியானது இம்முறையும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. அதனால் 15 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்காமல் போனது.

இந்நிலையில் இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்து ஆர்சிபி வெளியேறி இருந்தாலும் இன்னமும் ரசிகர்கள் ஆர்சிபி அணியின் மீது தங்களது அன்பை பொழிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் இருந்து வெளியேறிய பிறகு ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த பல வீரர்கள் ரசிகர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறாமலும் போவீர்கள். ஆனால் நாங்கள் விளையாடிய எல்லாப் போட்டிகளிலும் எப்போதும் ரசிகர்களாகிய நீங்கள் எங்களை ஆதரித்து வருகிறீர்கள்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி டீம்ல கிடைச்ச இந்தவொரு விஷயம் வேறயெந்த டீம்லயும் எனக்கு கெடைச்சதில்லை – தினேஷ் கார்த்திக்

உங்களுடைய ஆதரவு மற்றும் அன்பு எங்களுடைய கிரிக்கெட்டை மேலும் அழகாக மாற்றுகிறது. உங்களின் அபரிவிதமான அன்புக்கு நன்றி. அடுத்த சீசனில் சந்திப்போம் என ரசிகர்களுக்கு நன்றி கூறி விராட் கோலி சிறப்பு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement