எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.. சிம்புவின் பாடலை காண்பித்த விராட் கோலி – டேக் செய்து நன்றி தெரிவித்த சிம்பு

STR and Kohli
- Advertisement -

விராட் கோலிக்கு கடைசி சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பாக அமைந்து வருகிறது. ஏனெனில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு அடுத்ததாக நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்ற அவர் அடுத்தடுத்த ஐ.சி.சி கோப்பைகளை வென்றிருக்கும் வேளையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் கோப்பையையும் அவர் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

விராட் கோலிக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு :

ஏனெனில் இதுவரை 17 சீசன்களில் எந்த ஒரு தொடரிலுமே கோப்பையை கைப்பற்றாத ஆர்.சி.பி அணி நிச்சயம் இம்முறை விராட் கோலிக்காக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

- Advertisement -

அதோடு விராட் கோலியின் ஜெர்சி எண் 18, இந்த நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரும் 18 வது சீசன், அதுமட்டுமின்றி ஆர்.சி.பின் இன்ஸ்டாகிராமும் 18 மில்லியன் பாலோவர்ஸையும் எட்டியுள்ளது. இப்படி 18 என்கிற நம்பர் பல்வேறு இடங்களில் இம்முறை ஒற்றுமைப்பட்டு வருவதால் இந்த ஆண்டு விராட் கோலியின் ஆண்டாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் ஆர்.சி.பி அணியும் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விராட் கோலியிடம் பல்வேறு சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விராட் கோலி தனது பதிலினை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலியிடம் : உங்களுக்கு விருப்பமான பாடல் என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விராட் கோலி : நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். தற்போது நான் அதிகமாக கேட்கும் பாடல் இதுதான் என சிலம்பரசன் நடிப்பில் வெளியாகிய “பத்துதல” என்கிற படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” பாடலை தனது பிளே லிஸ்டில் எடுத்து நேரடியாக காண்பித்தார்.

இதையும் படிங்க : என்னோட குடும்பத்தினர் முன்னாடி இப்படி நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி – ஆட்டநாயகன் ரயான் ரிக்கல்டன் பேட்டி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இப்படி தமிழ் பாடலை கேட்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள வேளையில் தனது பாடல் தான் மிகவும் பிடிக்கும் என்று விராட் கோலி கூறியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென்னிந்திய நடிகரான யங் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் விராட் கோலியை டேக் செய்து நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள பதிவில் : “நீ சிங்கம் தான்” என விராட் கோலியை மென்ஷன் செய்து அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Advertisement