நான் எதிர்கொண்டதிலேயே பும்ரா கஷ்டமான பவுலர்.. ஒவ்வொரு பந்துலயும் இது இருக்கும்.. விராட் கோலி பேட்டி

Virat Kohli
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலகாலமாக துவங்குகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது. அந்தப் போட்டியிலிருந்து சிறப்பாக விளையாடி இந்த வருடம் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் பெங்களூருவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தயாராகி வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தாம் எதிர்கொண்டதிலேயே ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் கடினமான பவுலர் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பந்திலும் ஜஸ்ப்ரித் பும்ரா மனதளவில் விளையாடுவார் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் விராட் கோலி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

கடினமான பும்ரா:

“ஜஸ்ப்ரித் பும்ரா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐபிஎல் தொடரில் அவர் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார். நானும் அவருக்கு எதிராக கொஞ்சம் வெற்றிகரமாக பேட்டிங் செய்துள்ளேன். எனவே அவரை எதிர்கொள்ளும் போதெல்லாம் அது வேடிக்கையாக இருக்கும். ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடும் போது வலைப்பயிற்சியில் கூட அந்த வாய்ப்பு கிடைக்காது”

“வலைப்பயிற்சியில் கூட அவருக்கு எதிராக பயிற்சி எடுப்பது ஒரு ஐபிஎல் போட்டியை விளையாடுவதைப் போல் இருக்கும். ஒவ்வொரு பந்திலும் மனதளவில் ஆட்டம் இருக்கும். அவருக்கு எதிராக நான் ரன்கள் குவிக்க விரும்புவேன். என்னை அவுட்டாக்க அவர் விரும்புவார். எனவே அது ஒரு நேரடிப் போட்டியில் விளையாடுவதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும்”

- Advertisement -

காயத்தில் பும்ரா:

“இன்று வலைப்பயிற்சிகளில் விளையாடும் போது நான் வைத்திருக்கும் மார்க்கர் அவர் தான். அவர் மிகவும் மகிழ்ச்சியானவர். அதே சமயம் கடினமான சவாலை கொடுக்கக் கூடியவர் என்று நான் சொல்வேன்” எனக் கூறினார். அதாவது களத்தில் அசத்துவதற்கு வலைப் பயிற்சியில் பும்ராவுக்கு எதிராக நன்றாக விளையாட வேண்டும் என்ற கோட்பாட்டை வைத்துள்ளதாக விராட் கோலி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாஸ்டர்ஸ் லீக் 2025: கோப்பை வென்ற இந்தியாவுக்கு, தோற்ற வெ.இ அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? விவரம் இதோ

விராட் கோலி – ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ஐபிஎல் தொடரில் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் விராட் கோலி 15 பவுண்டரி 5 சிக்ஸ் உட்பட 140 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். அதற்கு சமமாக பும்ரா அவரை 5 முறை அவுட் செய்துள்ளார். அப்படிப்பட்ட பும்ரா தற்சமயத்தில் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அதனால் அவர் மும்பை அணிக்காக ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement