- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கேப்டனாக விலகினாலும் தோனி வழியில் இந்த ஒரு விடயத்தை கடைபிடிப்பேன் – விராட் கோலி சபதம்

இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவிகளில் இருந்து விலகி தற்போது சாதாரண வீரராக விளையாடி வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு 3 வகையான இந்திய கிரிக்கெட்டும் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தலைமையில் உலகக்கோப்பை தவிர ஏனைய அனைத்து தொடர்களிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா உலகின் அனைத்து இடங்களிலும் பல சரித்திர மிகுந்த வெற்றிகளை பெற்றது.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு மகத்தான வெற்றி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளை பதிவு செய்தது. அவர் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறக்கூடிய அணியாக இருந்த இந்தியாவை உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றிகளை பெறக்கூடிய அணியாக மாற்றிய பெருமை அவரையே சேரும்.

- Advertisement -

சாதாரண வீரர் :
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்ஷிப் பல விமர்சனங்களை சந்தித்தாலும் நவீன கால டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு நிகராக வேறு எந்த கேப்டனும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். தற்போது சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளதால் இந்திய அணியின் தலைமை பொறுப்பில் தலையிடாமல் தனது பேட்டிங்கில் மட்டும் முழுக்க முழுக்க கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Virat

- Advertisement -

ஏனெனில் கடந்த 2019க்கு பின் சதம் அடிக்க முடியாமல் இருந்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அவரும் கேப்டன் பதவிகளில் இருந்து விடை பெற்றுள்ளார். ஆனால் கேப்டனாக அவர் திடீரென விலகியது இந்தியாவின் தலைமை பொறுப்பில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக சமீபத்தில் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் இந்தியா வைட்வாஷ் தோல்வியை பெற்றது.

அந்த தொடரின்போது கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் ஒரு புறத்திலும் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றொரு புறத்திலும் சம்பந்தமே இல்லாமல் அமர்ந்து கொண்டு போட்டிகளை பற்றி விவாதிக்காமல் இருந்தார்கள். “விராட் கோலி மற்றும் இந்திய அணி நிர்வாகத்துக்கு இடையே மோதல்” நிலவுவதாக இதை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள். குறிப்பாக இதை பார்த்த பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனேஷ் கனேரியா இந்திய அணியில் பிளவு இருப்பதாக வெளிப்படையாகவே கூறி இருந்தார்.

- Advertisement -

என்றும் தோனி வழியில்:
இந்நிலையில் கேப்டனாக விலகினாலும் இந்திய அணிக்கு தமது ஆதரவு எப்போதுமே உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “முதலில் நீங்கள் என்ன சாதிக்க போகிறீர்கள் மற்றும் அந்த இலக்கில் எவ்வளவு சாதித்துள்ளீர்கள் என்ற முழுமையான புரிதல் வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் ஒரு கால வரையறையும் முடிவும் உள்ளதை நீங்கள் உணர வேண்டும். ஒரு பேட்டராக அணிக்கு நிறைய பங்காற்றி அதிலிருந்து பெருமைப்பட வேண்டும். அணியின் தலைமை பொறுப்பில் பங்காற்ற நீங்கள் கேப்டனாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

எம்எஸ் தோனி அணியில் சாதாரண வீரராக விளையாடியபோது தலைமை பொறுப்பில் பங்காற்றவில்லை என அர்த்தமில்லை. அவர் எப்போதும் தனது உள்ளீடுகளை அணிக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார். வெற்றியோ தோல்வியோ நமது கையில் இல்லை. ஒரு கலாச்சாரம் என வரும்போது நீங்கள் விளையாடும் ஆண்டுகள் மற்றும் உங்களின் பொறுப்புகள் அதற்கு அப்பாற்பட்டதாகும்” என கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவை வழிநடத்த கேப்டனாக இருந்தாக வேண்டும் என்ற அர்த்தமில்லை என தெரிவித்துள்ள விராட் கோலி தமக்கு கீழ் முன்னாள் கேப்டன் தோனி விளையாடியபோது இந்திய அணியை வழிநடத்தியதாகவும் கூறியுள்ளார். அதே போல் அவரின் வழியில் இனி விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எப்போதும் ஆதரவு:
“கேப்டன் பதவியிலிருந்து சரியான நேரத்தில் விலகுவதும் தலைமை பொறுப்பின் ஒரு அங்கமாகும். ஒருவர் அனைத்துவிதமான பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எம்எஸ் தோனியின் கீழ் விளையாடி பின் கேப்டனாக பொறுப்பேற்றேன். அப்போது போலவே இப்போதும் எனது மன நிலை உள்ளது. நான் அணியில் சாதாரண வீரராக விளையாடும்போது கூட என்னை ஒரு கேப்டனாகவே நினைத்துக் கொள்வேன். நம்மிடம் திறமையில் குறைவு இல்லை என்பதை நான் அறிவேன், திறமையை அதன் திறனுக்கு உயர்த்துவது பற்றி நான் யோசித்தேன். எனது தொலைநோக்கு பார்வையை நான் கட்டுப்படுத்த விரும்பினேன்.

நீங்கள் அதை விரிவுபடுத்த விரும்பினால். உங்களுக்கு கலாச்சாரம் தேவை. கலாச்சாரம் என்பது ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்க வேண்டும். ஒரு கேப்டனாக நாங்கள் எவ்வளவு மோசமான தருணத்திலும் இருந்து மீண்டு வெற்றி பெறும் கலாச்சாரத்தை கொண்டு வர அதிக கவனம் செலுத்தினேன் என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள விராட் கோலி இந்தியாவுக்காக விளையாடும் கடைசி நாள் வரை அனைத்து வகைகளிலும் இந்தியாவின் வெற்றிக்காக முயற்சிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

தமது தலைமையில் இந்திய அணி வீரர்களிடம் நடந்து கொண்டது பற்றி விராட் கோலி கூறியது பின்வருமாறு. “தொடர்பு ஒரு மிக முக்கியமான விஷயம், உங்களின் கருத்து எங்களுக்கு தேவையில்லை என்று யாராலும் துண்டிக்க முடியாது. நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன் என்று நீங்கள் மரியாதையுடன் சொல்லலாம். அந்த சமயத்தில் எனக்கு உதவி தேவைப்பட்டால் நான் உங்களை அணுகுவேன்.அந்த வகையான சமநிலை எனக்கு வேலை செய்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

- Advertisement -
Published by