
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களம் இறக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தார்.
குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்சர் அடித்து சாதனை படைத்த அவர் மிரட்டலாக பேட்டிங் செய்தார். அப்போது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கோன்ஸ்டஸ் நடந்து வந்தார்.
அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள். அதனால் அதிருப்தியடைந்த விராட் கோலி ஏன் என் மீது மோதுகிறீர்கள்? என்ற வகையில் கோபத்தை வெளிப்படுத்தினார். மறுபுறம் அமைதியாக சென்ற என் மீது நீங்கள் ஏன் மோதினீர்கள்? என்ற வகையில் கோன்ஸ்டஸ் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது.
உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து சண்டையை நிறுத்தினார்கள். ஆனால் அந்த இடத்தில் விராட் கோலி தான் வேண்டுமென்றே கோன்ஸ்டஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். அந்த தருணத்தை மீண்டும் பார்க்கும் போது விராட் கோலி தான் கோன்ஸ்டஸ் மீது மோதியது முதல் பார்வையில் தெரிய வருகிறது.
இந்நிலையில் அந்த தருணத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் விசாரிப்பார் என ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது. ஒருவேளை அதன் முடிவில் அவர்கள் மீது தவறு இருந்தால் நடுவர் லெவல் 1 அல்லது லெவல் 2 விதிமுறை மீறியதாக பரிந்துரை செய்வார். அதை ஏற்றுக் கொண்டு ஐசிசி 3 அல்லது 4 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுக்க (லெவல் 2 விதிமுறை) வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 18 ரன்ஸ்.. 4484 பந்துகள்.. பும்ராவையே நொறுக்கி 19 வயதில் மாஸ் காட்டிய ஆஸி வீரர்.. 3 அபார சாதனை
ஒருவேளை லெவல் 2 விதிமுறையை மீறியதற்காக 4 புள்ளிகளை பெற்றால் இந்தத் தொடரின் 5வது போட்டியில் விராட் கோலி அல்லது கோன்ஸ்டஸ் விளையாடுவதற்கு தடை பெறுவார்கள். லெவல் 1 விதிமுறை மீறியதாக கருதப்பட்டால் அபராதம் மட்டும் விதிக்கப்படும். எனவே இந்த விவாகரத்தில் என்ன நடக்கப்போகிறது? விராட் கோலி தண்டனைப் பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.