- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் விளையாடும்.. 2 விஜய் ஹசாரே போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? தேதி விவரம் இதோ

இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக அவர்களை வயதைக் காரணமாக காட்டி கழற்றி விட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முயற்சித்து வருகின்றனர்.

அதனுடைய முதல் படியாகவே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை கேப்டனாக வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்துள்ளார். அடுத்து நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரில் நாயகன் விருது வென்ற விராட் கோலியும் தம்முடைய பங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

விஜய் ஹசாரே கோப்பையில்:

அத்துடன் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் டாப் 2 இடங்களைப் பிடித்துள்ளார்கள். அதனால் வயதானாலும் திறமையும் தரமும் குறைந்துவிடவில்லை என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து தங்களை ஃபார்மில் வைத்துக் கொள்வதற்காக அடுத்ததாக அவர்கள் 2025 விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் தங்களது மாநில அணிக்காக விளையாட உள்ளனர்.

குறிப்பாக சர்துள் தாகூர் தலைமையிலான மும்பை அணிக்காக ரோஹித் சர்மா முதல் 2 போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட உள்ளார். அதன் படி மும்பை அணி தங்களது முதல் 2 போட்டிகளில் சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் அணிகளை எதிர்கொள்கிறது. அந்த 2 போட்டிகள் முறையே வரும் டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஜெய்ப்பூரில் காலை 9:00 மணிக்கு துவங்க உள்ளது.

- Advertisement -

விராட் கோலி, ரோஹித் சர்மா:

மறுபுறம் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணிக்காக 2 போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளார். அந்த 2 போட்டிகள் வரும் டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: எங்களோட ஆதரவை தாண்டி.. அபிஷேக் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்க இதான் காரணம்.. சூரியகுமார் பேட்டி

அதனால் அவ்விரு போட்டிகளில் விராட் கோலியை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் திரண்டு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் போட்டிகளை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வாயிலாக நேரலையில் பார்க்கலாம். அதே போல ஆன்லைன் மற்றும் மொபைலில் ஜியோஹாட்ஸ்டார் ஆப் வாயிலாக ரசிகர்கள் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம்.

- Advertisement -