எங்களோட ஆதரவை தாண்டி.. அபிஷேக் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்க இதான் காரணம்.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav
- Advertisement -

ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் கடந்த வருடம் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஓப்பனிங்கில் எதிரணிகளை அடித்து நொறுக்கிய அபிஷேக் இந்தியாவின் வெற்றிகளில் பங்கேற்றினார்.

அதே வேகத்தில் இந்த வருடமும் அதிரடியாக விளையாடிய அவர் ஒரு காலண்டர் வருடத்தில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். குறிப்பாக 2025 ஆசியக் கோப்பையில் ஃபைனல் தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய அவர் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரராகவும் அபிஷேக் முதலிடம் பிடித்தார்.

- Advertisement -

நம்பர் ஒன் அபிஷேக்:

முன்னதாக தம்முடைய அதிரடிக்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் கொடுக்கும் சுதந்திரமே காரணம் என்று அபிஷேக் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்களுடைய ஆதரவைத் தாண்டி இடைவிடாமல் கடினமாக உழைப்பதே அபிஷேக் ஷர்மாவின் அதிரடிக்கு காரணம் என்று கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். அவரைப் போன்ற வீரர்கள் கேப்டனாக தன்னுடைய வேலையை எளிதாக்குதாகவும் சூரியகுமார் கூறியுள்ளார்.

இது பற்றி ஐசிசி இணையத்தில் சூரியகுமார் பேசியது பின்வருமாறு. “கடினமான உழைப்பே அபிஷேக் சர்மாவின் வலுவான தரம் என்று நான் கருதுகிறேன். அது போட்டி துவங்குவதற்கு 2 – 3 நாட்கள் முன்பாக அவர் ஈடுபடும் விஷயங்களைப் பற்றியது. அதை யாரும் பார்க்க மாட்டார்கள். ஒரு வீரர் களத்திலும் ஹோட்டலிலும் உடற்பயிற்சி கூடத்திலும் செய்வதை யாரும் பார்ப்பதில்லை”

- Advertisement -

கேப்டன் பாராட்டு:

“அதுவும் ஒரு வகையான தரமாகும். அனைத்து வீரர்களுமே அதை செய்கிறார்கள். ஆனால் அபிஷேக் ஷர்மா அதை இடைவிடாது செய்வதை நான் பார்க்கிறேன். அதனாலேயே அவர் நன்றாக விளையாடுகிறார். அவர் தன்னுடைய செயல்முறைகளில் தொடர்ந்து நிற்கிறார். அதன் காரணமாக வெற்றியை ருசித்துள்ள அவருக்கு டி20 கிரிக்கெட்டில் முன்னோக்கிச் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்”

இதையும் படிங்க: டி20 உ.கோ வரலாற்றில்.. யாரும் செய்யாத உலக சாதனையை இந்தியா 2026இல் படைக்கும்.. சூரியகுமார் நம்பிக்கை

“தாம் இளமையானவர் என்பதையும் அவர் புரிந்து கொண்டுள்ளது நல்லது. அவர்களைப் போன்ற வீரர்கள் தான் கேப்டனாக என்னுடைய வேலையை எளிதாக்குகிறார்கள். அவரைப் போல கிரிக்கெட்டின் பிராண்டை எங்கள் வீரர்கள் அனைவரும் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அந்த வகையில் டாப் ஆர்டரில் விளையாடும் அபிஷேக் ஷர்மா மற்றவர்களையும் வழி நடத்துகிறார்” என்று கூறினார்.

Advertisement