6, 6, 4, 6, 6, 4.. கிங் கோலி இரட்டை உலக சாதனை.. சிஎஸ்கே தோல்வியை உறுதியாக்கிய ஃசெபார்ட் சரவெடி சாதனை

RCB vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே மூன்றாம் தேதி பெங்களூருவில் 52வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி – ஜேக்கப் பேத்தல் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஜோடி சேர்ந்து சிஎஸ்கே பவுலர்களை அடித்து நொறுக்கினர்.

அதிலும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவதற்கு பதில் வழக்கத்திற்கு மாறாக சிக்ஸர்களை பறக்க விட்டார். அந்த வகையில் 10 ஓவரில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் பேத்தல் அரை சதத்தை அடித்து 55 (33) ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து மறுபுறம் மிரட்டிய விராட் கோலி 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 (33) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

கோலி இரட்டை சாதனை:

இதையும் சேர்த்து பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி 152 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் இதே பெங்களூரு மைதானத்தில் கிரிஸ் கெயில் 151 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

அதுபோக டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்கள் (301*) அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் விராட் கோலி படத்துள்ளார். இதற்கு முன் பெங்களூரு அணிக்காக கிரிஸ் கெயில் 263 சிக்ஸர்கள் அடித்ததே இரண்டாவது அதிகபட்சமாகும். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மிடில் ஆர்டரில் தேவ்தூத் படிக்கல் 17, கேப்டன் படிதார் 11, ஜிதேஷ் சர்மாவை 7 ரன்னில் அவுட்டாக்கி சென்னை போராடியது.

- Advertisement -

செபார்ட் முரட்டுத்தனம்:

ஆனால் 19வது ஓவரில் வந்த ரோமாரியா செபார்டு 6, 6, 4, 6, 6 நோபால், 0, 4 என கலீல் அகமதுக்கு எதிராக ஒரே ஓவரில் 33 ரன்கள் அடித்தார். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்த ஓவரில் 20 ரன்கள் அடித்து மொத்தம் 14 பந்துகளில் 53* ரன்கள் அடித்து முரட்டுத்தனமான ஃபினிஷிங் கொடுத்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் இரண்டாவது வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற கேஎல் ராகுல், பட் கமின்ஸ் ஆகியோரது சாதனைகளையும் செஃபார்ட் சமன் செய்தார்.

இதையும் படிங்க: முடிஞ்சது முடிஞ்சி போச்சி.. இனிமேலாவது இதை பண்ணுங்க.. சி.எஸ்.கே அணிக்கு அட்வைஸ் கொடுத்த – ஆரோன் பின்ச்

அதனால் 20 ஓவரில் பெங்களூரு 213/5 ரன்கள் அடித்து இந்தப் போட்டியில் வெற்றியை உறுதி செய்துள்ளது. ஏனெனில் 2019க்குப்பின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஒருமுறை கூட வெறும் 180+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. அதனால் இந்தப் போட்டியிலும் சென்னையின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதி ஆகியுள்ளது என்று சொல்லலாம். அந்த அணிக்கு அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement