இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 8 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதோடு இந்த நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துவிட்டது உறுதியாகியுள்ளது. இதனால் எதிர்வரும் நான்கு லீக் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றாலும் இந்த தொடரில் அவர்களால் எவ்வகையிலும் முன்னேற முடியாது.
சி.எஸ்.கே இதை செய்ஞ்சா நல்லா இருக்கும் : ஆரோன் பின்ச்
அதன்காரணமாக எஞ்சியுள்ள இந்த நான்கு லீக் போட்டிகளில் பெரிய மாற்றங்களை செய்து அடுத்த ஆண்டிற்கான சிஎஸ்கே அணியை கண்டெடுக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணியும் மே 3-ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது.
தற்போது பத்தாவது இடத்தில் பரிதாபமான நிலையில் இருக்கும் சிஎஸ்கே அணி என்ன செய்தால் அடுத்த ஆண்டு பலமாக கம்பேக் கொடுக்கும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் சிஎஸ்கே அணி இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது சிஎஸ்கே அணி என்ன நிலையில் இருக்கிறது என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். எனவே தற்போதுள்ள அணியில் புதிதாக வந்துள்ள இளம் வீரர்களை வைத்து எந்த அளவிற்கு அவர்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டுமோ அதனை செய்து பரிசோதித்து பார்க்க வேண்டும்.
இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் அடுத்த ஆண்டு அணியை எவ்வாறு மாற்றலாம் என்ற முடிவுகள் கிடைக்கும். எனவே இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆரோன் பின்ச் கூறியுள்ளார். என்னதான் ஆரோன் பின்ச் இவ்வாறு கூறியிருந்தாலும் சி.எஸ்.கே அணி மாற்றங்களை செய்வதாக தெரியவில்லை.
இதையும் படிங்க : என்னுடைய கரியரில் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் இந்த 4 பேர்தான் – தனித்தனியாக அறிவித்த விராட் கோலி
ஏனெனில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் கடைசியாக நடைபெற்ற போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டியிலும் விளையாடுவதாக அறிவித்துள்ளார். இப்படி தோனி அணியை மாற்றாமல் மீண்டும் மீண்டும் சொதப்பலாக விளையாடும் வீரர்களுக்கே வாய்ப்பளித்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



